

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் ஜனவரி மாதம் ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் வரும் திங்கட்கிழமை (டிச.12) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற தினசரி ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த தரிசனங்களுக்கான டிக்கெட்டுகள் வரும் திங்கட்கிழமை (டிச. 12) மதியம் 3 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.
மேலும் அன்று காலை 10 மணியிலிருந்து டிசம்பர் 14-ம் தேதி காலை 10 மணி வரை, எலக்ட்ரானிக் குலுக்கல் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு கிடைக்கும். ஜனவரி மாத ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் சர்வ தரிசன டோக்கன்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் கூறியுள்ளது.