வார ராசிபலன் 01-12-2016 முதல் 07-12-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

வார ராசிபலன் 01-12-2016 முதல் 07-12-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)
Updated on
3 min read

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நீங்களும் அவர்களுக்கு நலம் புரிவீர்கள். சினிமா, நாடகம், நாட்டியம் போன்ற கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றால் ஆதாயம் கிடைக்கும்.

மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். பொருள் வரவு கூடும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். என்றாலும் அவை சுபச்செலவுகளாக இருக்கும். மாணவர்களுக்கு மறதியால் அவதி ஏற்படும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். புதனின் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 2-ல் சூரியனும் சனியும் கூடியிருப்பதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம். l எண்கள்: 4, 6.

பரிகாரம்: திருமாலை வழிபடவும். கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபாடு அதிகமாகும். அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பிரச்சினைகள் எளிதில் தீரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.

இயந்திரப் பணிகள் லாபம் தரும். கலைஞர்களது எண்ணம் ஈடேறும். மாதர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். தம்பதியினர் உறவு நிலை திருப்தி தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகுத் துறைகளில் வருவாய் கிடைக்கும். ஜன்ம ராசியில் சூரியனும் சனியும் 4-ல் கேதுவும் இருப்பதால் உடல்நலம் பாதிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 5, 6, 9. l பரிகாரம்: ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும் உலவுவது நல்லது. புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கைகளில் ஈடுபாடு கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். மனத்தில் துணிவு கூடும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும்.

குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். பொருள் வரவு கூடும் என்றாலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். அரசாங்கத்தாராலும் தந்தையாலும் வேலையாட்களாலும் சங்கடங்கள் சூழும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களும் தொழிலாளர்களும் அரசியல்வாதிகளும் விழிப்புடன் செயல்படவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 7. l பரிகாரம்: விரயச் சனிக்கும் சூரியனுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் 11-ல் சூரியனும் சனியும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். கலைத் துறை ஊக்கம் தரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள சந்தர்ப்பம் கூடிவரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நல்ல இடத்துக்கு மாறுதல் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவுக்கு லாபம் தரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். புதன் 12-ல் இருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 4, 5.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், பொன் நிறம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 6, 8.

பரிகாரம்: சர்ப்ப வழிபாடு செய்வது அவசியம். திருமாலை வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சனி ஆகியோரும், 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. நிர்வாகத் திறமையும், அறிவாற்றலும் தோற்றப் பொலிவும் கூடும் நேரமிது. முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். அரசுதவி பெற சந்தர்ப்பம் கூடிவரும். முக்கியமானவர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகள் ஆக்கம் தரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். தந்தையால் நலம் உண்டாகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ ஆதாயமோ கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபாடு கூடும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். மாணவர்களது திறமை வெளிப்படும். பண வரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 5 (இரவு).

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். தாய்நலம் சீராகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.

செந்நிறப் பொருட்கள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5 (பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 3, 4, 5, 9. l பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in