

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் இணையம் வாயிலாக ரூ. 300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர்.
ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளிவந்ததால், 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை விரைந்து முன்பதிவு செய்துள்ளனர். ஆதலால், வெறும் 40 நிமிடங்களிலேயே டிசம்பர் மாதத்தில் உள்ள 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் தீர்ந்து போயின. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தொடக்கம் முதலே முன்பதிவு செய்ய தொடங்கினாலும், அனைவரும் ஒரே சமயத்தில் முன்பதிவு செய்வதால் ‘சர்வர்’ பிரச்சினையால் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என மனவருத்தத்துடன் தெரிவித்தனர்.