

திருமலை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்பட உள்ளது. பிறகு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனினும், சர்வ தரிசன முறையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு திருமலையில் கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று சந்திரகிரகணம் என்பதால் கருடசேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.