புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் ஏராளமானோர் தரிசனம்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் ஏராளமானோர் தரிசனம்
Updated on
1 min read

சென்னை: ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி, இம்மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும், சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன. மேலும், நாள் முழுவதும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து, பெருமளை தரிசித்தனர்.

இதேபோல, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலிலும் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in