

திருமலை: திருப்பதியில் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த நிலையில், தற்போது புரட்டாசி மாத கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் இன்று, 3வது சனிக்கிழமை என்பதால், ஏழுமலையானை தர்ம தரிசன வழியாக சென்று தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
பிரம்மோற்சவம் நிறைவடைந்த பிறகும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நிறைந்தனர். இதனால் வியாழனன்று 30 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இன்று 3வது புரட்டாசி சனிக்கிழமை என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகமானது. இதனால், நேற்று மாலை நிலவரப்படி 48 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்தது.