Published : 06 Oct 2022 08:01 AM
Last Updated : 06 Oct 2022 08:01 AM

இந்திய, அரபு கட்டிடக்கலை வடிவமைப்புடன் துபாயில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாய்க்கு அருகே அமைந்துள்ள ஜெபல் அலி நகரில், இந்திய மற்றும் அரபு கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்து கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. படம்: பிடிஐ

துபாய்: துபாயில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் அரபு கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் சகிப்புத்தன்மை, அமைதி, நல்லிணக்கத்தை வலியு றுத்துவதாக அமைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாய் நகருக்கு அருகே அமைந்துள்ளது துறைமுக நகரம் ஜெபல் அலி. மிகப்பெரிய வர்த்தக மையமாகவும் இது விளங்குகிறது. ஜெபல் அலி பகுதியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்து கோயில் கட்டப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததை யடுத்து நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

அப்போது இசைக் கலைஞர்கள் மேள, தாளங்கள் முழங்க, அர்ச்சகர்கள் ‘ஓம் சாந்தி, சாந்தி ஓம்’என முழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள், இந்திய சமுதாய அமைப்பின் உறுப்பின ர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து அபு தாபியில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “துபாயில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோயிலை யுஏஇ அமைச்சர் ஷேக் நயன் பின் முபாரக் அல் நயன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தூதர் சஞ்சய் சுதிர், யுஏஇ-யில் வசிக்கும் 35 லட்சம் இந்தியர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் அந்நாட்டு அரசுக்குநன்றி தெரிவித்தார்” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய தூதர் சுதிர் கூறும் போது, “துபாயில் இந்து கோயில்திறக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது யுஏஇ-யில் வசிக்கும் இந்துக்களின் மத ரீதியிலான விருப்பத்தை பூர்த்தி செய்யும்” என்றார். இந்திய மற்றும் அரபு கட்டிடக்கலை வடிவமைப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் சகிப்புத்தன்மை, அமைதி,நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இதில் சிவன், கிருஷ்ணர், விநாயகர் மற்றும் மகாலட்சுமி உட்பட 16 தெய்வங்களின் சிலை கள் நிறுவப்பட்டுள்ளன. ஜெபல் அலியில், 7 தேவாலயங்கள், சீக்கியகோயில், இந்திய கோயில் என9 வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x