

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. 16-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. ஆன்மிக, அறப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். குடும்பத்தில் அமைதி காணலாம்.
கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் லாபம் தரும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத்துணைவராலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். 16-ம் தேதி முதல் சூரியனும் சனியும் 8-ம் இடத்தில் கூடுவதால் வயிறு, தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 13, 16.
திசைகள்: தென் கிழக்கு, வட மேற்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 5, 6, 7, 9 | பரிகாரம்: குரு, சனி, ராகுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் சூரியனும், 8-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். திரவப்பொருட்கள் லாபம் தரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.
புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். 16-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடம் மாறி, சனியோடு கூடுவதால் சுகம் குறையும். அலைச்சல் அதிகமாகும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. உடன்பிறந்தவர்கள் அளவோடு உதவுவார்கள். சாதுக்கள், சித்தர்களின் தரிசனம் பெற வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 16.
திசைகள்: வட மேற்கு, கிழக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 7 | பரிகாரம்: துர்கையை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் புதனும்; சனியும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். அறிவாற்றல் பளிச்சிடும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உதவ முன்வருவார்கள். உழைப்புக்குரிய பலன் கிடைக்கும். நவீன விஞ்ஞானத்துறைகள் ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலம் பெற வாய்ப்பு உண்டு. வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் சில பிரச்சினைகள் ஏற்படும்.
பக்குவமாகச் சமாளிக்கவும். 16-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் ஏற்படும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வீண்வம்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 13, 16.
திசைகள்: தென் மேற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், பச்சை, கருநீலம்.
எண்கள்: 4, 5, 8 | பரிகாரம்: தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.
கடக ராசி வாசகர்களே
கோசாரப்படி கிரகநிலை சிறப்பாக இல்லை. எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. விஷ பயம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும். அந்நியர்களால் சங்கடங்கள் சூழும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். பிறரால் ஏமாற்றப்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் விழிப்புத் தேவை.
பிள்ளைகளால் மன அமைதி குறையும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புதிய துறைகளில் அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்திகள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் குறைந்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 11, 13.
திசை: வட மேற்கு.
நிறம்: வெண்மை.
எண்: 2 | பரிகாரம்: கணபதி, துர்கை ஜப, ஹோமம் செய்வது நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் சூரியனும், 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. பொருள் வரவு அதிகரிக்கும். அரசு உதவி கிடைக்கும். முக்கியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும்.
கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். வழக்கில் அனுகூலமான திருப்பமோ, வெற்றியோ கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். வாரப் பின்பகுதியில் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 13, 16.
திசைகள்: தென் கிழக்கு, வட கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 9 | பரிகாரம்: துர்கை, விநாயகரை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 4-ல் சுக்கிரனும், 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும் நேரமிது. போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் உண்டாகும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
கண், கால் பாதம், மார்பு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பேச்சில் நிதானம் தேவை. கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் இருக்கவும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். எக்காரியத்திலும் அவசரம் வேண்டாம். நிதானம் அவசியம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 16.
திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வட மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8 | பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும்.