பத்மாவதி தாயார் கோயிலில் 26-ம் தேதி நவராத்திரி உற்சவம்

பத்மாவதி தாயார் கோயிலில் 26-ம் தேதி நவராத்திரி உற்சவம்
Updated on
1 min read

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 26-ம் தேதி முதல் நவராத்திரி உற்சவங்கள் தொடங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியையொட்டி, திருச்சா னூர் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாட்கள் நவராத்திரி உற்சவ விழா வெகு விமரிசையாக நடத் துவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும், நவரத்திரி விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், செப்டம்பர் 30-ம் தேதி லட்சுமி பூஜை, அக்டோபர் 5-ம் தேதி அஷ்டோத்ர சத கலசாபிஷேகம் போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும். 9 நாட்களும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

திரளான பக்தர்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் என் பதால், அனைத்து ஆர்ஜித சேவைகளையும், சிறப்பு தரிசனங்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

தாயாருக்கு தங்க பாத காணிக்கை

நவராத்திரி உற்சவங்கள் நெருங்குவதையொட்டி பத்மாவதி தாயாருக்கு ஹைதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா தம்பதி யினர் 85 கிராம் எடையில் ரூ.4லட்சம் மதிப்பிலான தங்கப் பாதங்களை நேற்று காணிக் கையாக வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in