Published : 09 Sep 2022 06:23 AM
Last Updated : 09 Sep 2022 06:23 AM

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு வரகுனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு வரகுனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வரகுனேஸ்வரர்- திருக்காமகோடீஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுளாக கோயில் புனரமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சாலைக்கிராமம் கண்மாய் குழு சார்பில் கோயிலில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டது.

தொடர்ந்து செப்.5-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜைகள் தொடங்கின. நேற்று காலை கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 9.35 மணிக்கு வேதங்கள் முழங்க ராஜகோபுரம், மூலஸ்தான கோபுர கலங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், குயவர்பாளையம், பிச்சங்குறிச்சி, அய்யம்பட்டி, சமுத்திரம், வலசைக்காடு, முத்துப்பட்டினம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானமும், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன.

மேலும் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இவ்விழாவுக்கு வந்த இந்து பக்தர்களை வரவேற்று முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே பேனர்களை வைத்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x