Published : 19 Aug 2022 04:26 AM
Last Updated : 19 Aug 2022 04:26 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தற்போது பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஏழுமலை யானுக்கு அதிகாலை அங்கப் பிரதட்சணம் செய்து, நேர்த்தி கடன் செலுத்தி இலவசமாக தரிசனம் செய்ய 22-ம் தேதி ஆன்லைன் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
இதன் மூலம் வரும் செப்டம்பர் மாதத்தில் 1-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள், வரும் 22-ம் தேதி காலை 9 மணிக்கு தேவஸ்தான இணைய தளம் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
வரும் 27-ம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கு வதால், செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அங்கபிரதட்சண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT