Published : 31 Jul 2022 04:39 AM
Last Updated : 31 Jul 2022 04:39 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ஆகஸ்ட் மாத விசேஷங்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாத விசேஷங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி, ஆண்டாள் திருவடிப்பூரம் சாத்துமறை, மற்றும் அன்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பரின் ‘புரசைவாரி தோட்டா’ எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2-ம் தேதி கருட பஞ்சமியையொட்டி திருமலையில் உற்சவரான மலையப்பர் இரவு கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

6-ம் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாள் நினைவு தினம், 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு திருமலையில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. 9-ம் தேதி சத்ர ஹஸ்தபனோற்சவம், 10-ம் தேதி ஸ்ராவண பவுர்ணமி, ரக்‌ஷா பந்தன் மற்றும் வைகானச மகாமுனி ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. 12-ம் தேதி ஹையக்ரீவ ஜெயந்தி, 15-ம் தேதி சுதந்திர தின விழா, 19-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20-ம்தேதி உட்டித்திருவிழா, 29-ம் தேதிபலராமர் ஜெயந்தி, 30-ம் தேதி ஸ்ரீ வராக ஜெயந்தி, 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசன முறையில் தரிசிக்க தற்போது 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை சுவாமியை 54,747 பேர் தரிசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x