Last Updated : 29 Sep, 2016 11:26 AM

 

Published : 29 Sep 2016 11:26 AM
Last Updated : 29 Sep 2016 11:26 AM

நித்திய கொலுவாக வீற்றிருக்கும் அம்மன்கள்

அக்டோபர் 1 நவராத்திரி விழா

தமிழகத்தில் உள்ள பல ஆலயங்களில் நவராத்திரி கொலு விழாவில் பல படிகள் அமைத்து இறைத் திருவுருவங்கள் வீற்றிருக்கும் காட்சி அழகு. மனத்திற்கு உற்சாகம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிராகாரங்களில் அமைக்கப்படும் இந்த கொலுவைக் காண பக்தர்கள் திரண்டு வருவது ஆண்டுதோறும் வழக்கம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஐந்து படிகள் அமைக்கப்பட்டு, கொலு பொம்மைகள் வரிசைக் கிரமமாக அடுக்கப்பட்டு இந்த ஆண்டும் ஆராதிக்கப்படவுள்ளன.

சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் உள்ள அரைக்காசு அம்மன் கோயிலில், பல ஊர்களைச் சேர்ந்த பிரபலமான அம்மன்கள் 108 சிலாரூபங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டு அனுதினமும் ஆராதனை செய்யப்படுகிறது. அச்சிலாரூபங்கள், மதுரை மீனாட்சி, மாங்காடு காமாட்சி, காசி விசாலாட்சி, வேலூர் திருவுடை அம்மன், திருவொற்றியூர் வடிவுடை, திருமுல்லைவாயல் கொடியுடை, ஆற்றுகால் பகவதி, வசியமுகி அம்மன், கோவில்பட்டி செண்பகவள்ளி, ராஜ துர்க்கை, மைசூர் நிமிஷாம்பாள் ஷியாமளா தேவி, திருவொற்றியூர் பாகம்பிரியாள்.

திருவண்ணாமலை அபிதகுஜலாம்பாள், வனதுர்க்கை, திருப்பதி வகுளாதேவி, கொல்லூர் மூகாம்பிகை, பேரம்பாக்கம் செல்லாத்து அம்மன், பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன்,

ஹரித்வார் கங்கையம்மன், பாலதிரிபுரசுந்தரி, பட்டுக்கோட்டை நாடி அம்மன், திருவாரூர் கமலாம்பிகை, தேவகோட்டை கோட்டை அம்மன், நாவலூர் பெரியகாண்டி அம்மன், ராசிபுரம்

நித்திய சுமங்கலி மாரி அம்மன், படவேடு ரேணுகாம்பாள்,

விஷ்ணு துர்க்கை, விஜயவாடா கனகதுர்க்கா, சக்ரதேவி அம்மன், சிருங்கேரி சாரதாதேவி, கோவை தண்டுமாரி, கல்யாண மாரி, சந்தோஷி மாதா, பள்ளத்தூர் பெரிய நாயகி, மரத்துறை காத்யாயினி, திருநெல்வேலி பேராத்து செல்லி, வண்டியூர் தெப்பக்குளம் மாரி அம்மன்,

புதுக்கோட்டை அரியநாச்சி, திருச்சானூர் பத்மாவதி, குடமுருட்டி சீத்தலாதேவி, திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை சூளுர்பேட்டை செங்கால அம்மன், மும்பை மும்பா தேவி, இமயமலை வைஷ்ணவி தேவி, கன்னிகா பரமேஸ்வரி, திருவேற்காடு கருமாரி அம்மன், நெல்லை காந்திமதி அம்மன், ராஜ மாதங்கி, புவனகிரி பூங்காவனத்து அம்மன்.

சென்னை கோலவிழி அம்மன், நாகை நெல்லுக்கடை மாரியம்மன், பெரிய பாளையம் பவானி அம்மன், முப்பந்தல் இசக்கி அம்மன், நாங்குநேரி உலகநாயகி, பாண்டிச்சேரி ஏழைமாரியம்மன், பாஞ்சாலங்குறிச்சி ஜக்கம்மா, குரங்கனி முத்துமாலை அம்மன், தஞ்சாவூர் உஜ்ஜையினி அம்மன்,

வேட்டைவலம் மனோன்மணி, ஈரோடு பெரிய மாரியம்மன், ஈரோடு பண்ணாரி அம்மன், துல்ஜாப்பூர் தேவி பவானி, பெங்களூர் ராஜராஜேஸ்வரி, திருவையாறு வெயிலுகாத்தமாரி அம்மன், மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன், காளஹஸ்தி ஞானபிரசுன்னாம்பிகை, திருமங்கலக்குடி மங்களாம்பிகை, சங்கரன்கோவில் கோமதி.

சோட்டாணிக்கரை பகவதி, விருதுநகர் முத்துமாரி, கண்டணூர் செல்லாயி, சேலம் அன்னதான மாரியம்மன், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன், சக்குளத்துக்காவு பகவதி, காசி அன்னபூரணி, காயத்ரி அம்மன், கல்கத்தா காளி, கல்கத்தா ஆயிரம் காளி, மலேசியா மகாகாளி, திண்டுக்கல் ராஜகாளி, சமயபுரம் மாரியம்மன், அருப்புக்கோட்டை சௌடேஸ்வரி அம்மன்.

சிறுவாச்சூர் மதுரகாளி, உறையூர் ஜெயகாளி, குலசேகரப்பட்டினம் முத்தார அம்மன், நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள், தாயமங்கலம் முத்துமாரி, திருக்கடையூர் அபிராமி, செங்கை நாகாத்து அம்மன், ராமேஸ்வரம் நம்புநாயகி, திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரி, அறந்தாங்கி ஐந்து வீட்டுக்காளி, பட்டீஸ்வரம் துர்கை, ஒட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, புதுக்கோட்டை புவனேஸ்வரி, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, அறந்தாங்கி வீரமாகாளி, ரத்னமங்கலம் ஸ்ரீ அரைக்காசு அம்மன் ஆகியோர் இத்திருத்தலத்தில் அமர்ந்த வண்ணம் அருள்பாலிக் கின்றனர். மிகச் சுத்தமாக பராமரிக்கப்படும் இத்திருக்கோயிலில் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

அரைக்காசு அம்மன் ஏன்?

தொலைந்த பொருள், பத்திரம் போன்றவை இந்த அம்மனை வேண்டிக் கொண்டால் கிடைத்துவிடுகிறது என்பது பல ஆண்டுகளாக நம்பிக்கையில் உள்ளது. புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாளை குல தெய்வமாக கொண்ட தொண்டை மான் அரசாண்டபோது அவரது பத்திரம் ஒன்று காணாமல் போய்விட்டதாம். தனது குல தெய்வமான பிரகதாம்பாளை மன்னன் வேண்டிக் கொண்டபோது, பத்திரம் கிடைத்துவிட்டால், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அரை காசு தானமாக அளிப்பதாக உறுதி அளித்தான்.

வெகு விரைவில் பத்திரம் கிடைத்துவிட, தான் கூறியது போலவே, குடிமக்கள் அனைவருக்கும் அரை காசு வழங்கினான் மன்னன். அந்த காசில் ஒருபுறம் அம்மன் திருவுருவமும், மறுபுறம் தமது அரசைக் குறிக்கும் `விஜயா` என்ற சொல் தெலுங்கிலும் பதிக்கப்பட்டிருக்கும். அதே வகை அரை காசு தற்போது இக்கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அரை காசு அம்மனை பக்தர்கள் தாங்களே பூஜிக்கும் வண்ணம் விரிவான ஏற்பாடுகளை நிர்வாகி கிருஷ்ணன் செய்துள்ளார்.

நித்திய கொலுவாக, ரத்தினமங்கலம் அரைகாசு அம்மன் கோயிலில் இந்த 108 அம்மன்களும் அழகாய் அலங்கரிக்கப்பட்டு வீற்றிருக்கும் காட்சி அற்புதம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x