

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், ஆஸ்தான மண்டபத்தில் அதிகாரிகள், அர்ச்சகர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பிரச்சினையால் வரலட்சுமி விரதத்தை விமரிசையாக கொண்டாட முடியவில்லை. இம்முறை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு, மலர்களால் அலங்காரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.