

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நாளை ஆனிவார ஆஸ்தானம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் தர்ம தரிசனம் வாயிலாக செல்லும் பக்தர்கள் நேற்று 12 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 72,195 பக்தர்கள் தரிசித்துள்ளனர். இவர்கள் மூலம் சுவாமிக்கு உண்டியலில் ரூ.4.24 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 35,967 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி கோயிலுக்கு வெளியே சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.