ஆன்மிக நூலகம்: காக்கப் பிறந்தார் காலபைரவர்

ஆன்மிக நூலகம்: காக்கப் பிறந்தார் காலபைரவர்
Updated on
1 min read

செய்த கொடுமையைக் கண்டு பொறுக்கவியலாத பிரசுதாரணன் எனும் முனிவன் தேவர்களுக்காக காசியில் உத்திர வேள்வி செய்தான். அதில் வயிரவர் ஒரு பாலகனாகத் தோன்றினார். வடு என்றால் பாலகன் (வடு மாங்காய் என்றால் பிஞ்சு மாங்காய்). அதனால் வயிரவருக்கு வடுகன், வடுநாதன் என்று பெயர் வந்தது.

அசுரர்கள் அவருடைய வண்ணம் நீலம். திருவடிகளில் சிலம்பும், மார்பில் தவமாலையும் அணிந்திருப்பார். முக்கண்ணனான இவர் கைகளில் சூலம், கபாலம், பாசம் உடுக்கை ஆகியவற்றை ஏந்தியிருக்கிறார்.

கோரைப் பற்களையும், செஞ்சடையையும் உடையவர். காலில் சிலம்பு விளங்கும். முத்து மாலையும், தவ மாலையும் மார்பில் புரள, மந்திர பூடணனாய் வடுவாகிப் பரமயோகியாய் நின்றார். இக்காட்சியை (திருப்புத்தூர்) புராணப் பாடல் கீழ் வருமாறு விளக்கும்.

கரம் இரண்டினும் தண்டமும்கபாலமும் கவின்

தாளமாலை, மஞ்சீரம், அங்கதம் முதல் தயங்க

பொருவில் மந்திர பூடணனாய் வடுவாகிப்

பரம யோகியாய் நின்றனன் ஆண்டெழுபகவன்

இவ்விதம் உருத்திர யாகத்தில் எழுந்த வயிரவர் அசுரர்களை அழித்தார்.(ப 2)

அட்ட (எட்டு) வயிரவர், அஜிதாங்க வயிரவர், குரு வயிரவர், சண்ட வயிரவர், உன்மத்த வயிரவர், கபால வயிரவர், பீஷண வயிரவர், குரோதன வயிரவர், சம்கார வயிரவர்.

புத்தகம்: வயிரவர் சிறப்பும் வழிபாடும்

ஆசிரியர் டாக்டர் தி. பாலசுப்ரமணியன்

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை: ரூ.150

தொடர்பு: 24342810, 24310769

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in