திருத்தலம் அறிமுகம்: காலில் தழும்புகளுடன் காட்சி தரும் கண்ணபிரான்

திருத்தலம் அறிமுகம்: காலில் தழும்புகளுடன் காட்சி தரும் கண்ணபிரான்
Updated on
2 min read

தன்னை நோக்கித் தன்னை வருத்திக்கொண்ட ரிஷியின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு காட்சி கொடுத்த தலம் இது.

கடலூர் மாவட்டம் வடலூருக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கருங்குழி. விஷ்ணு பக்தரான கோபில மகரிஷி, சரயு நதிக்கரையில் தங்கியிருந்தபோது நாரதமுனி அவரைச் சந்தித்தார். நாரத முனியை வரவேற்று உபசரித்த ரிஷி, மகா விஷ்ணுவை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதற்கு, “தீர்த்த யாத்திரை சென்று வந்தால் விஷ்ணுவைக் காணும் பேற்றினைப் பெறுவாயாக” என்று போதித்தார் நாரதமுனி.

அதன்படியே, தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பிய கோபில மகரிஷி கங்கை, யமுனை, உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடிவிட்டு காவிரிக் கரைக்கு வந்தார். காவிரியில் தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டார். அதுவரைக்கும் மகாவிஷ்ணு தனக்குக் காட்சி கொடுக்காததால் வழியில் தன்னை மறந்து மகாவிஷ்ணுவை வேண்டிக் கடுந்தவம் புரிந்தார் ரிஷி. அவரது தவத்தை மெச்சிய திருமால் அப்போதே லெட்சுமி நாராயணப் பெருமாளாகக் காட்சி கொடுத்தார்.

சிலையைப் பாதுகாத்த பக்தர்கள்

சைவ-வைணவ சர்ச்சையில் சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் மூலவர் சிலை கடலில் வீசப்பட்டது. அப்படி வீசப்பட்ட திருமால் சிலையை கருங்குழியில் இருந்த திருமால் அடியார்கள் கடலிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து கருங்குழி திருமால் கோயிலில் வைத்துப் பாதுகாத்தனர். இந்தத் தகவலை அறிந்த ஸ்ரீ ராமானுஜர், இத்திருத்தலத்தில் எழுந்தருளினார்.

அடியார்களிடம் கோவிந்தராஜ பெருமாள் சிலையை பெற்றுக்கொண்ட அவர் கள்ளக்குறிச்சி வழியாக திருமலை திருப்பதி சென்று அங்கே பெருமாளை பிரதிஷ்டை செய்ததாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு. வள்ளலார் பெருமானார் கருங்குழி கிராமத்தில் தங்கிய போது கருங்குழி லெட்சுமி நாராயணப் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டதால், தாம் இயற்றிய திருஅருட்பாவில் பத்துப் பாடல்கள் இப்பெருமானைப் பற்றிப் பாடினார்.

காலில் தழும்புகளுடன் காட்சிதரும்

கண்ணபிரான் சைவ-வைணவ சர்ச்சையில் சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் மூலவர் சிலை கடலில் வீசப்பட்டது. அப்படி வீசப்பட்ட திருமால் சிலையை கருங்குழியில் இருந்த திருமால் அடியார்கள் கடலிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து கருங்குழி திருமால் கோயிலில் வைத்துப் பாதுகாத்தனர். இந்தத் தகவலை அறிந்த ஸ்ரீ ராமானுஜர், இத்திருத்தலத்தில் எழுந்தருளினார். அடியார்களிடம் கோவிந்தராஜ பெருமாள் சிலையை பெற்றுக்கொண்ட அவர் கள்ளக்குறிச்சி வழியாக திருமலை திருப்பதி சென்று அங்கே பெருமாளை பிரதிஷ்டை செய்ததாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு. வள்ளலார் பெருமானார் கருங்குழி கிராமத்தில் தங்கிய போது கருங்குழி லெட்சுமி நாராயணப் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டதால், தாம் இயற்றிய திருஅருட்பாவில் பத்துப் பாடல்கள் இப்பெருமானைப் பற்றிப் பாடினார்.

கால் கடுக்க நடந்த கண்ணபிரான்

‘நடந்த கால்கள் நொந்தனவோ’ என்ற ஆழ்வார் திருவாக்கின்படி, மகாபாரதத்தில் பாண்டவர்களுக்குத் துணையாக நின்று தர்மத்தை நிலைநாட்ட கண்ணபிரான் பல இடங்களுக்குக் கால்நடையாக நடந்தார். அதனால் அவரது கால்களில் புண்கள் உண்டாகித் தழும்பாக மாறின. அத்தழும்புகளைத் தாங்கிய திருவடிகளுடன் கண்ணபிரானே இங்கு ஸ்ரீனிவாசனாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இப்பெருமானுக்குத் திருவோண நட்சத்திரத்தன்று மாலையில் சாந்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணைத் தடைகள் நீங்கி திருமண யோகம் கைகூடி வரும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இத்திருக்கோயிலில் உள்ள சந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று நம்பப்படுகிறது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் தனது மார்பில் மகாலட்சுமியைத் தாங்கியும் இடதுமடியில் லட்சுமியை அமர்த்தியும் காட்சி தருவதால் இப்பெருமானை வழிபட்டால் கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும், பகையுணர்வு அகலும், குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் என்பது நம்பிக்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in