2023 ஜனவரியில் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு

2023 ஜனவரியில் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு
Updated on
1 min read

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று சீராய்வு கூட்டம் நடந்தது. இதில், சட்டப்பேரவை அறிவிப்புகளின் நிலை குறித்து மண்டல அலுவலர்களுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

2021-22 ஆண்டில் அறிவிக்கப்பட்ட சுமார் 1,800 பணிகளில் 40 சதவீதத்துக்கு மேலான பணிகள் முடிந்துள்ளன. 50 சதவீத பணிகள் நடந்து வருகின்றன.

நெல்லையப்பர் கோயில் விழாக்களில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் 3-ம் தேதி (இன்று) தொடங்கப்பட உள்ளது. 2023 ஜனவரியில் பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in