Last Updated : 26 May, 2016 12:32 PM

 

Published : 26 May 2016 12:32 PM
Last Updated : 26 May 2016 12:32 PM

அரங்கனுக்கு அதிசயத் துலாபாரம்

பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. `சமஸ்த ஜகதார சோமகுலதிலக’ எனச் சாசனங்களால் புகழப்படுபவனும், `எம்மண்டலமும் கொண்டு கோயில் பொன்வேய்ந்த பெருமாள் சுந்தர பாண்டிய தேவர்’ என்று சிறப்பு விருதுகளால் கொண்டாடப்படுபவனும் சேரர், சோழர், தெலுங்குச் சோழர் – காகதீயர், காடவர், போசளர் ஆகியோரை வெற்றி கொண்டவனுமான சுந்தர பாண்டியன் திருவரங்கம் ஆலயத்திற்கு நான்கு வீதிகளில் இருபத்து நான்கு துலாபுருஷ மண்டபங்கள் கட்டுவித்து அவற்றில் அமைக்கப்பெற்ற பிரம்மாண்ட துலாக்கோலில் ஏறியமர்ந்து, தனது எடைக்கு எடை பொன்னையும், நவமணிகளையும் வாரி வழங்கினான்.

இவ்வளவு செல்வங்களைத் `துலாபாரம்’ செய்தும் சுந்தர பாண்டியனுக்குப் போதும் என்று தோன்றவில்லை. தான் மட்டும் துலாத்தட்டில் ஏறி நின்று அறக்கொடை வழங்குவதா? தன் வெற்றிகளுக்கெல்லாம் துணை நின்ற பட்டத்து யானையோடல்லவா நாம் துலாத்தட்டில் ஏற வேண்டும் என்று எண்ணினான்.

ஆனால், யானையை ஏற்றி நிறுத்தக்கூடிய துலாக்கோல் எங்கே இருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதிலுடன் மேலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமாக தகவல்களைத் தருகிறது கெளதம நீலாம்பரன் எழுதிய ‘அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்’ என்ற நூல்.

சுவாரசியமான பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ள இந்நூலாசிரியரின் எழுத்து நடை, வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது.

ஆசிரியர்: கெளதம நீலாம்பரன்

வெளியீடு: சூரியன் பதிப்பகம்

விலை: ரூ. 175

தொடர்பு: 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்

சென்னை- 600 004.

தொலைத் தொடர்பு 044 4220 9191, 72990 27361

இமெயில்: kalbooks@dinakaran.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x