கீழப்பெரும்பள்ளத்தில் ஜூன் 21-ல் கேது பெயர்ச்சி விழா

கீழப்பெரும்பள்ளத்தில் ஜூன் 21-ல் கேது பெயர்ச்சி விழா
Updated on
1 min read

எதிர்வரும் 21-ம் தேதி (சனிக் கிழமை) கேது பெயர்ச்சி நடப்பதை ஒட்டி கேது தலமான கீழப் பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவக்கிரகங்களின் முதன்மை மூர்த்தி என்று அழைக்கப்படுபவர் கேது பகவான். மேஷ ராசியில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலம் இருந்தவர் தற்போது ஆனி மாதம் 7-ம் தேதி (ஜூன் 21) காலை 11.12 மணிக்கு மீன ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இதை ஒட்டி கேது தலத்துக்கு பரிகாரத்துக்காகவும், வழிபாட்டுக்காகவும் லட்சக்கணக் கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப் படைத்தேவைகள், தாமதமின்றி தரிசனம் ஆகியவற்றுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் முருகையன் தெரிவித்துள்ளார்.

கேது பெயர்ச்சியை ஒட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதற் கான பரிகார பூஜைகள், ஹோமங் களுக்கு கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரில் வர இயலாதவர்களுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் பரிகாரம் செய்து பிரசாதம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரில் வர இயலாதவர்கள் “அருள்மிகு நாகநாத சுவாமி திருக் கோயில், கீழப்பெரும்பள்ளம்” என்ற பெயருக்கு காவிரிப்பூம்பட்டி னம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாற்றத்தக்க வகையில் ரூ.100க் கான வரைவோலை எடுத்து அனுப் பினால் அவர்களுக்கு பரிகார பிர சாதம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in