Published : 26 Jun 2014 04:17 PM
Last Updated : 26 Jun 2014 04:17 PM

வார ராசி பலன் 26-06-2014 முதல் 02-07-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். வசீகர சக்தி உண்டாகும்.

முகப்பொலிவு கூடும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களுக்கு எண்ணம் ஈடேறும். நண்பர்கள், உறவினர்களால் நல்லது நடக்கும்.

நிலபுலங்கள் லாபம் தரும். போக்குவரத்து இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். ஜலப் பொருட்கள் லாபம் கொண்டுவரும். அரசுப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். தாய் நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 4, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வசீகரச் சக்தி கூடும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும்.

பெண்களின் எண்ணம் நிறைவேறும். எதிரிகள் விலகிப் போவார்கள். அரசு உதவி கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். மக்கள் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்குச் சோதனைகள் சூழும். பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6. 7.

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடவும். கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் சுபச் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். அலைச்சல் வீண்போகாது. வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக நல்ல தகவல் வந்து சேரும்.

ஜலப்பொருட்கள் லாபம் தரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். விருந்து, விழாக்களில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.

முகப் பொலிவு கூடும். குடும்பப் பெரியவர்கள், சாதுக்கள், மகான்கள் ஆசி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: முருகனுக்கும் துர்கைக்கும் அர்ச்சனை, ஆராதனை செய்யவும். எதிலும் பதற்றத்தைத் தவிர்க்கவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் ராகுவும் 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது ஈடேறும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்கள் நிலை உயரும்.

வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இடமாற்றம், நிலைமாற்றம் சிலருக்கு ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படவும்.

கண்ணில் பிரச்சினை ஏற்படலாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் பங்கேற்க சந்தர்ப்பம் வரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். நல்லவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, பச்சை.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: ஜன்ம குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. கோதுமை தானம் செய்யவும். பார்வையற்றவர்களுக்கு உதவவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 10-ல் புதனும் சுக்கிரனும் 11-ல் சூரியனும் உலவுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சமுதாய நலப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வாரப் பின்பகுதியில் சுப காரியங்களுக்காகவும், மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்ய வேண்டி வரும். இடமாற்றம் உண்டாகும்.

2-ல் செவ்வாயும் ராகுவும் 8-ல் கேதுவும் உலவுவதால் வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போதும், இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும்போதும் பாதுகாப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, இளநீலம்.

எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியர், விநாயகர், துர்கை அம்மனை வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களிடம் ஆசி பெறவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே

சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் தொலைதூரத் தொடர்பு நலமாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஆசிரியர்கள் நிலை உயரும். உத்தியோகஸ்தர்களின் நோக்கம் நிறைவேறும்.

பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். எண்ணங்கள் நிறைவேறும். சுப காரியங்கள் நிகழும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும்.

தனவந்தர் சகாயம் கிடைக்கும். பெரியவர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஜன்ம ராசியில் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: துர்கை, முருகனை வழிபடவும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x