

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த வருடாந்திர வசந்தோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.
கரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் ஏகாந்தமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வசந்தோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சுப்ரபாத சேவை நடைபெற்றது.
அதன் பின்னர், தாயாரை ஊர்வலமாக வெள்ளிக்கிழமை தோட்டத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்வசருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு மாட வீதிகளில் தாயாரின் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.