Published : 08 May 2022 08:25 AM
Last Updated : 08 May 2022 08:25 AM

வாராந்திர சேவைகளை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால், திருமலையில் சுவாமிக்கு நடத்தப்படும் வாராந்திர சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு பீடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் என ஆர்ஜித சேவைகள் நடந்துகொண்டே இருக்கும். இந்த சேவைகளில் திரளான பக்தர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், தற்காலிகமாக வாராந்திர சேவைகளை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே, விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவ ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை மற்றும் நிஜபாத தரிசன ஆர்ஜித சேவைகளையும் விரைவில் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

இதற்கு பக்தர்கள், மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்பாடு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x