Published : 28 Apr 2022 06:25 AM
Last Updated : 28 Apr 2022 06:25 AM
திருப்பதி: ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மே மாதம் 13-ம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
இதனையொட்டி மே மாதம் 8-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனமும், 12-ம் தேதி அங்குராற்பன நிகழ்ச்சிகளும் ஆகம சாஸ்திர விதிகளின்படி நடைபெற உள்ளது. 13-ம் தேதி காலை கொடியேற்றமும், இரவு பெரிய சேஷ வாகன சேவையும் நடைபெற உள்ளது. 20-ம் தேதி காலை தேர்த் திருவிழாவும் 21-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT