

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பது சிறப்பு. வார முன்பகுதியில் சந்திரனின் சஞ்சாரமும் அனுகூலமாக உள்ளது. முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்த வாய்ப்புக் கூடிவரும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். தியானம், யோகாவில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான மனநிலை அமையும். சாதுக்கள், மகான்களின் சந்திப்பு நிகழும். அவர்களது ஆசிகளும் கிடைக்கும். வாரப் பின் பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். ஜன்ம ராசியில் புதனும், 8-ல் வக்கிர செவ்வாயும், வக்கிர சனியும் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன்நிறம்.
எண்கள்: 3, 6, 7.l
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். தன்வந்திரி ஜபம் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே வலுப்பெற்றிருப்பது சிறப்பு. கேது நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். திரவப் பொருட்கள் லாபம் தரும். பொதுப் பணிகளில் ஆர்வம் கூடும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு துறைகளில் வளர்ச்சி காணக் குறுக்கீடு முளைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28, 31.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: திருமாலை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும், 11-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. வாரத்தின் முன்பகுதி சாதாரணமாகவே இருக்கும். குடும்ப நலனில் கவனம் தேவை. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தொலைதூரப் பயணத்தின்போது விழிப்பு தேவை. இயந்திரப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரிகளுக்கு வாரப் பின்பகுதியில் லாபம் அதிகமாகும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நிலை உயரும். அரசியல், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்களுக்கு முன்னேற்றம் தடைபடும். தொழிலதிபர்கள் அகலக்கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்டமான தேதி: மே 31.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: விநாயகர் அகவல் படிப்பது நல்லது. குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 5-ல் செவ்வாயும், 10-ல் புதனும், 11-ல் சூரியனும்; சுக்கிரனும் சஞ்சரிப்பது சிறப்பு. கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். நல்லவர்கள் நலம் பல புரிவார்கள். நற்காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் தங்கள் நோக்கம் ஈடேறப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்குச் செழிப்பான பாதை தெரியவரும். கொடுக்கல், வாங்கல் இனங்கள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் பிற மொழி, மத, இனக்காரர்களால் சங்கடம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்பு தேவை. விஷ பயம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 31.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, சிவப்பு, வெண்மை, இளநீலம்.
எண்கள்: 1, 3, 5, 6, 9.
பரிகாரம்: கணபதி ஜபம் செய்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் உலவுவது சிறப்பு. சுக்கிரன் 10-ல் இருந்தாலும் நலம் புரிவார். செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகவே இருந்துவரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தந்தை வழிச் சொத்துகள் கிடைக்கும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களால் வருவாய் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6.
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும்; சனியும், 6-ல் கேதுவும், 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். நீங்களும் மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். மனதில் துணிவு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள். தியானம், யோகாவில் நாட்டம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே களிப்புறவு கூடும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாணவர்களது நிலை உயரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களின் எண்ணம் நிறைவேறும். உடல்நலம் சீராகவே இருந்துவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28, 31.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி, துர்கையம்மனை வழிபடுவது நல்லது.