சர்வ தரிசன டோக்கன் விநியோகம் திருமலையில் 2 நாட்கள் நிறுத்தம்

திருப்பதி பூதேவி காம்ப்ளக்ஸ் பகுதியில் சர்வ தரிசன டோக்கன் பெற, நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
திருப்பதி பூதேவி காம்ப்ளக்ஸ் பகுதியில் சர்வ தரிசன டோக்கன் பெற, நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
Updated on
1 min read

திருமலை: கரோனா தொற்று குறைந்துவிட்டதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம் சிறப்பு தரிசன முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் தர்ம தரிசன டோக்கன்கள் மட்டும் தினமும் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சர்வ தரிசன டோக்கன்களை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, 12-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனால், நேற்று திருப்பதி வந்த பக்தர்கள் 12-ம் தேதி வரை தங்குவதற்கு போதிய இடம் இல்லை.

இதனை கருத்தில் கொண்டு, தர்ம தரிசன டோக்கன்கள் வரும் 12-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் எனவும், அந்த டோக்கன்கள் மூலம் 13-ம் தேதி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் தர்ம தரிசன டோக்கன்கள் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in