Published : 07 Apr 2016 11:41 AM
Last Updated : 07 Apr 2016 11:41 AM

வார ராசிபலன் 7-4-2016 முதல் 13-4-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 11-ல் கேது, 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. சுப காரியங்கள் நிகழும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். மக்களுக்காக சுபச் செலவு செய்வீர்கள். கலைத்துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை நிலவும். மாதர்களது எண்ணம் ஈடேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். தலை, கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு விலகும்.

வாரப் பின்பகுதியில் பணப் புழக்கம் அதிகமாகும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். இயந்திரப்பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களிலிருந்து தப்பலாம். அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 11, 12.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு.

‎நிறங்கள்: மெரூன், பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7. ‎

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் கேது, 11-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோர் உலவுவது நல்லது. முக்கியமான எண்ணங்களில் சில நிறைவேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். பெண்களின் நோக்கம் நிறைவேறும். எதிரிகள் அடங்குவார்கள். தந்தை, வாழ்க்கைத்துணைவியால் நலம் உண்டாகும்.

சொத்துகள் லாபம் தரும். உயர் பொறுப்பில் உள்ளவர்கள் உதவுவார்கள். வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், இயந்திரப்பணியாளர்களுக்கு விழிப்புத் தேவை. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிக்கவும். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 7, 11.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 6, 7.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் உலவுவது சிறப்பு. சூரியன், செவ்வாய், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உயர்பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். நிர்வாகத்திறமை கூடும். உடன்பிறந்தவர்கள், தந்தை, உற்றார், உறவினர்களால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள்.

நிலபுலங்கள் சேரும். சொத்துகளால் ஆதாயம் கிடைத்துவரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : ஏப்ரல் 7, 9, 11.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், கறுப்பு, பச்சை, வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.

பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.



கடக ராசி வாசகர்களே

புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தான, தருமப்பணிகளில் நாட்டம் கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வியாபாரம், எழுத்து, பத்திரிகை, தரகு தொழிலில் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கள் லாபம் தரும்.

பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். அதிர்ஷ்ட இனங்களால் லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 7, 11.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், தாமரை நிறம், இள நீலம், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.



சிம்ம ராசி வாசகர்களே

சுக்கிரன் ஒருவரே கோசாரப்படி அனுகூலமாக உலவுகிறார். செவ்வாய் 4-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். கலைத்துறையினர், பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். பெண்களால் ஆடவர்களுக்கு நலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். அதனால் உடல் அசதியும் ஏற்படும். ராசிநாதன் சூரியன் 8-ல் இருப்பதால் உஷ்ணாதிக்கத்தால் பாதிக்கப்பட நேரலாம்.

எதிரிகள் உண்டு என்பதால் விழிப்புடன் இருக்கவும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. பெற்றோர் நலனில் அக்கறை தேவை. பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். வாரப் பின்பகுதி முன்பகுதியைவிடச் சிறப்பாக அமையும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். அரசுப்பணிகளில் கவனம் தேவை. நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 11, 12.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், சனியும், 6-ல் கேதுவும், 8-ல் புதனும் உலவுவது நல்லது. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். போட்டிப் பந்தயங்கள், வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி காணலாம். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவர். வியாபாரம் பெருகும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு தொழிலில் லாபம் கிடைக்கும்.

நிலபுலங்கள் சேரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் உதவுவார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 7-ல் சூரியனும் சுக்கிரனும் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 12-ல் ராகு இருப்பதால் பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசுப்பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம். கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: 7, 11.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன், கருநீலம்.

எண்கள்: 5, 7, 8, 9.

பரிகாரம்: ராகுவுக்கும் சூரியனுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x