குருவாயூர் ஆலயம்: ஓர் அரிய ஆவணம்

குருவாயூர் ஆலயம்: ஓர் அரிய ஆவணம்
Updated on
1 min read

‘குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா டெம்பிள்: எ சோல் நரிஷிங்க் பில்கிரிமேஜ்’(GURUVAYUR SREE KRISHNA TEMPLE: A SOUL NOURISHING PILGRIMAGE) புத்தகத்தை தி இந்து குழுமம் சென்ற ஆண்டு வெளியிட்டது. அதற்குக் கிடைத்த ஏகபோக வரவேற்பையடுத்து தற்போது குருவாயூர் கோயிலின் புதிய பரிமாணங்களை வெளிக்கொணரும் வகையில் GURUVAYUR SREEKRISHNA TEMPLE- TRYST WITH THE SUBLIME-ஐ ‘தி இந்து’ வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தில் குருவாயூர் கோயிலின் வரலாறு, கட்டிடக்கலை, சடங்குகள், விழாக்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் 18 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன.

இன்று குருவாயூர் கோயிலில் காணப்படும் கண்கவர் சுவர் ஓவியங்கள் தீட்டக் காரணமாக அமைந்த நிகழ்வு 1970களில் நிகழ்ந்த பயங்கரமான தீ விபத்துதான். கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சியில் புதிய ஓவியர்கள் கிடைக்க ஓவியக் கலையும் புதிய பரிமாணம் அடைந்தது என சுனிதா பாலகிருஷ்ணன் விவரிக்கிறார்.

14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கோக சந்தேசத்தில், குருவாயூர் குறித்த முதல் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் தான் சிறுவனாக 1940களில் குருவாயூருக்குச் சென்றபோதுகூட 25 பேருக்கு அதிகமான பக்தர்களைக் கோயிலுக்குள் பார்த்ததில்லை என எழுதுகிறார் கல்வெட்டாய்வு நிபுணரும் வரலாற்றாசிரியருமான எம்.ஆர். ராகவா வாரியர். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை அரிய ஒளிப்படங்களோடும், ஓவியங்களோடும் தந்திருக்கிறது ‘குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா டெம்பிள்’ ட்ரிஸ்ட் வித் தி சப்லைம் புத்தகம்.

பகவான் கிருஷ்ணனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் பிரசித்தி பெற்ற தலமான குருவாயூர் ஆலயத்தின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் நூல் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in