

அன்னை சாரதா தேவி நிகழ்த்திய மிகப் பெரிய அற்புதம் ஒன்று உண்டு. அற்புதம் ஏதும் நிகழ்த்தாமல், அன்புமயமான தம் வாழ்க்கையினாலேயே பலரைத்த சொந்த மாக்கிக் கொண்டதுதான் அந்த அற்புதம். அதைவிடப் பெரிய அற்புதம் என்னவென்றால் தம்மை அறியாத மக்களையும் தம் அன்புத் தோற்றத் தினாலேயே பரவசம் கொள்ளச் செய்ததே ஆகும்.
சுவாமி யதீஸ்வரானந்தர் அமெரிக்காவில் ஆன்மிகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒருநாள், அன்னை சாரதா தேவியின் திருவுருவப் படத்திற்குச் சட்டம் போடுவதற்காக ஒரு கடைக்குச் சென்றார். கடையிலிருந்த பெண்ணிடம் அன்னையின் படத்தைக் கொடுத்தார். அந்தப் பெண் சிறிது நேரம் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனத்தில் அது ஆழ்ந்த ஒரு பதிவை ஏற்படுத்தியுள்ளது என்பது அவளது பார்வையில் விளங்கியது. மென்மையான குரலில் யதீஸ்வரானந்தரிடம், “ இந்தப் படத்தில் இருப்பவர் உங்கள் தாயா?” என்று கேட்டாள். ஆமாம் என்றார் அவர்.
அன அவருக்கு மட்டுமா அன்னை? அந்தப் பெண்ணுக்கும் அன்னைதான். அவள் அதை அறிந்திராவிட்டாலும் அவளது மனமும் அன்னை யின் படத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டது.
நூல்: வாழும் முறைமை நாரை.ச.நெல்லையப்பன்
வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் சேலம்.07 விலை: ரூ.60/-