கானமும் கதையும்: ஆயிரம் ஆண்டுகள் வாழும்

கானமும் கதையும்: ஆயிரம் ஆண்டுகள் வாழும்
Updated on
1 min read

ஆண்டாளையும், திருப்பாவையையும் அறியாதவர்கள் மிகச் சிலரே. அதே போல் திருப்பாவையின் உள்ளார்ந்த பொருள் அறிந்தவர்கள் வெகு சிலரே. அனைவரும் அதன் உள்ளர்த்தங்களை அறிய வேண்டும். அதிலும் எளிமையாக அது புரிய வேண்டும் என்பதற்காகவே, திருமலா திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை கானாம்ருதம்

(தமிழ் உபந்யாஸத்துடன்) என்ற குறுந்தட்டை (சிடி) வெளியிட்டுள்ளது.

வேதங்கள், சாஸ்திரங்கள், புராண, இதிகாசங்கள், திவ்ய பிரபந்தங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள விதம் அற்புதம். மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காராச்சாரியார், திருப்பாவை ஜீயர் எனப்படும் உடையவர் ராமானுஜர் ஆகியோரின் வியாக்கியானங்களை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உபந்யாஸ்சம்.

இது, திருப்பாவை குறித்த தெள்ளத்தெளிவான விளக்கத்தை அளிக்கிறது. மகோபாத்யாயா, சாஸ்த்திர வித்வமணி, ஸ்ரீமான் பாதூர் பி.ஆர். ரங்கராஜன் சுவாமி இதைச் சிறப்புற அளித்துள்ளார். இது, அறிஞர்களுக்கு ஆனந்தம். பக்தர்களுக்குப் பரவசம். திருப்பாவைப் பாசுரங்களை துவாரம் லஷ்மி அருமையாகவும் அழுத்தமாகவும் பாடியுள்ளார்.

இந்த எம்.பி 3 சிடியைத் திருமலா திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீவெங்கடேஸ்வரா ரிகார்டிங் திட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை கானாம்ருதம் (தமிழ் உபந்யாஸத்துடன்)
விலை ரூ.40,
திருமலா திருப்பதி தேவஸ்தானம் வெளியீடு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in