பிரச்சினைக்குப் பூட்டு…

பிரச்சினைக்குப் பூட்டு…
Updated on
1 min read

கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களின் பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். மனக் கஷ்டம், பணக் கஷ்டம், தொழிலில் நஷ்டம் என ஒருபக்கம், குடும்பத்தில் குழப்பம், தினமும் தகராறு, தீராத நோய்கள் என இப்படியாகப் பிரச்சினைகள் ஏராளம்.

கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், அலகு குத்துதல், அக்னிச்சட்டி ஏந்துதல், தீப்மிதித்தல், மொட்டையடித்தல், அங்கம்புரளுதல், உடலில் சேறு பூசிக் கொள்ளுதல், குதிரை சிலைகளை வாங்கி கோயிலில் வைத்தல், வெண்கல மணி கட்டுதல், வேல் அடித்து வைத்தல், வண்ணக் காகித மாலை போடுதல், மல் துணி வாங்கிப் போடுதல், வடை மாலை அணிவித்தல், அன்ன தானம் செய்தல் என நூற்றுக்கணக்கான நேர்த்திக் கடன் செலுத்தும் முறைகள் இருந்தாலும் அதையும் தாண்டிய ஒன்றாக இது மற்ற எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்டது என்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் பூட்டுப் போடுவதைக் கூறலாம்.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் விதவிதமான அதிர்வுகளை பக்தர்களுக்கு உணர்த்துபவை.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலின் ‘ரங்கா ரங்கா’ கோபுரம் வழியாக உள்ளே சென்றால் முதலில் வரும் ரங்கவிலாச ஆஸ்தான மண்டபத்தில் இருக்கும் கல் கொடிமரத்தைச் சுற்றிலும், கம்பியில் விதவிதமான பூட்டுகள் தொங்குகின்றன.

பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டி இங்கு பக்தர்கள் பூட்டு மாட்டுகின்றனர். குடும்பம், வேலை பார்க்கும் இடம், சொந்த தொழில் என எங்கு பிரச்சினை என்றாலும் கடைசியில் அரங்கனை சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in