வார ராசி பலன் 25-2-2016 முதல் 2-3-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

வார ராசி பலன் 25-2-2016 முதல் 2-3-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
Updated on
3 min read

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 11-ல் புதன், சூரியன் கேதுவும் உலவுவது சிறப்பு. அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறை லாபம் தரும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். 27-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடம் மாறி சனியுடன் கூடுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.

தாய் நலனில் கவனம் தேவை. சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. இயந்திர பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. குரு பலம் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு தெளிவான மனநிலை உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1,3, 5, 7. ‎

பரிகாரம்: அனுமன் சாலிசா படிப்பதும் கேட்பதும் நல்லது. மாற்று திறனாளிகளுக்கு உதவவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9-ல் உலவுவது சிறப்பு. சூரியன், புதன், கேது அனுகூலமாக இருக்கிறார்கள். முக்கியமான பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். எதிர்ப்புகள் அகலும். கலைஞர்கள் வெற்றி படிகளில் ஏறுவார்கள். பெண்களுக்கு மன மகிழ்ச்சி கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் வருவாய் கிடைக்கும். 27–ம் தேதி முதல் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். சகிப்பு தன்மை தேவை. வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. ஆன்மீக அறநிலைய ஜோதிட ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, பச்சை.

எண்கள்: 1, 5, 6, 7.

பரிகாரம்: 4 – ல் உலவும் ராகுவுக்குத் துர்க்கையை வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

சுக்கிரன், சனி, ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப நலம் சீராக இருந்து வரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். புதியவர்களது தொடர்பு கிட்டும். அதனால் அனுகூலம் உண்டாகும். பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.பொது பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். 27-ம் தேதி முதல் செவ்வாய் 6–ம் இடம் மாறுவதால் மனதில் துணிவு பிறக்கும்.

எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் ஏற்படும். வழக்கில் நல்லத் திருப்பத்தைக் காணலாம். குரு 3–ல், சூரியன், புதன், கேது ஆகியோர் 9-ல் உலவுவதால் பிள்ளைகளாலும் தந்தையாலும் சில இடர்பாடுகள் உண்டாகலாம். நிலபுலங்களால் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மீகவாதிகள் தங்கள் கடமைகளை சரிவர ஆற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், கறுப்பு, வெண்மை.

எண்கள்: 4, 6. 8.

பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்தியைத் தொடர்ந்து வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே

புதன், குரு ஆகியோர் அனுகூலமாக இருக்கிறார்கள். இதனால் பேச்சாற்றல் வெளிப்படும். குடும்ப நலம் சீராக இருந்து வரும். பெரியவர்கள், தனவந்தர்கள் உதவுவார்கள். பொருளாதார நிலை உயரும். சொத்துகள் லாபம் தரும். 8-ல் சூரியனும், கேதுவும் இருப்பதால் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கண், முகம் உபத்திரவம் உண்டாகும்.

தந்தை நலனில் கவனம் தேவை. 27–ம் தேதி முதல் செவ்வாய் 5–ம் இடம் மாறினாலும், தன் சொந்த வீட்டில் உலவும் நிலை அமைவதால், ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். சுக்கிரன் 7–ல் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரால் பிரச்சினைகள் ஏற்படும். தொழில் கூட்டாளிகளிடம் பக்குவமாகப் பழகுவது நல்லது. அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் தடைபடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசை: வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், பச்சை.

எண்: 5.

பரிகாரம்: சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்.

சிம்ம ராசி வாசகர்களே

3 – ல் உள்ள செவ்வாய், உங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்துவார். எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகள் சேரும். சொத்துகளால் வருவாயும் கிடைக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி பெற சந்தர்ப்பம் உருவாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் அலைச்சல் ஏற்படும்.

வாழ்க்கை துணைவராலும் தொழில் கூட்டாளிகளாலும் தொல்லைகள் ஏற்படும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. எலக்ட்ரானிக், கம்ப்யுட்டர் துறையில் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். பெற்றொர் நலனில் கவனம் தேவை. முன் பின் அறிமுகம் இல்லாதவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினர், மாதர்களுக்குச் சோதனையான நேரம். எனவே பக்குவமாக சமாளிக்கவும். ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: தெற்கு.

நிறங்கள்: சிவப்பு.

எண்கள்: 9.

பரிகாரம்: நவகிரக வழிபாடு செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

சூரியன், புதன், சனி, சுக்கிரன், கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் வந்து சேரும். அரசியல்வாதிகள், அரசு பணியாளர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறை லாபம் தரும். தொழிலாளர்களது கோரிக்கை நிறைவேறும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும்.

மாணவர்களது திறமை பளிச்சிடும். 27-ம் தேதி முதல் செவ்வாய் 3–ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். போட்டிகள், விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். 12-ல் குருவும் ராகுவும் இருப்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 1, 5, 6, 7, 8.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி, துர்க்கையை வழிபடவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in