வார ராசி பலன் 18-2-2016 முதல் 24-2-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

வார ராசி பலன் 18-2-2016 முதல் 24-2-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)
Updated on
3 min read

துலாம் ராசி வாசகர்களே

புதன், குரு, சுக்கிரன், ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.

புதிய பதவிகள் சிலருக்கு கிடைக்கும். சுப காரியங்கள் நிகழும். பயணத்தால் முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். பொருளாதார நிலை உயரும். சுகானுபவம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். சாதுகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 22.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இள நீலம், பச்சை, வெண்மை, சாம்பல் நிறம்.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் , 10-ல் ராகுவும் உலவுவதால் கலைஞானம் வெளிப்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். உடன்பிறந்த சகோதரிகள் ஓரளவு உதவுவார்கள். புனிதமான காரியங்களில் ஈஉபாடு உண்டாகும். கடல் வாணிபம் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று கூடும்.

புதிய பதவி, பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். ஜன்ம ராசியில் சனியும், 12-ல் செவ்வாயும் 4-ல் கேதுவும் உலவுவதால் உடல் நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். பெற்றோர் நலனிலும் சகோதர நலனிலும்கூட அக்கறை தேவை. வேலைப்பளு கூடும். வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 24.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம் வாசிப்பதும் கேட்பதும் நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 3-ல் சூரியனும் கேதுவும், 9-ல் குருவும், 11-ல் செவ்வாயும் சஞ்சரிப்பது சிறப்பு. குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிறரிடம் சுமுகமாகப் பழகி, அவர்களது நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். நிர்வாகத்திறமை கூடும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். மனதில் துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகமாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 12-ல் சனி உலவுவதை மறக்கலாகாது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19 (பகல்), 22, 24.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 3, 5, 6, 7. 9.

பரிகாரம்: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது நல்லது. சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். வழக்கில் நல்ல திருப்பமும் தீர்ப்பும் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம்.

பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். பிறரால் புகழப்படுவீர்கள். பிரச்சினைகள் எளிதில் தீரும். வாரப்பின்பகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 24.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 6, 8, 9.

பரிகாரம்: குரு, ராகு, கேதுவுக்குப் பிரீதி செய்து கொள்ளவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும், 10-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பண வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். எதிர்ப்புகள் குறையும். உழைப்பு வீண்போகாது. புத்திசாலித்தனம் வெளிப்படும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். திருமனம் போன்ற சுப காரியங்கள் நிகழும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையைப் பெறுவீர்கள்.

அலங்காரப் பொருட்களும் சேரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் பாராட்டுவார்கள். ஜன்ம ராசியில் சூரியனும் கேதுவும் இருப்பதால் உஷ்ணாதிக்கம் சற்று அதிகரிக்கும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 22.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 8.

பரிகாரம்: சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. திருமாலை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் நண்பர்களும் உறவினர்களும் உதவ முன்வருவார்கள். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை வெளிப்படும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். பெண்களின் எண்ணம் ஈடேறும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும்.

பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சூரியன், செவ்வாய், குரு அனுகூலமாக உலவுவதால் அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. அரசு அபராதம் கட்ட வேண்டிவரும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கை தேவை. உடல் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 19, 22, 24.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், புகை நிறம்.

எண்கள்: 4, 5. 6.

பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. ஆராதனைகள் செய்வது நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in