வார ராசிபலன் 03-12-2015 முதல் 09-12-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

வார ராசிபலன் 03-12-2015 முதல் 09-12-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
Updated on
3 min read

மேஷ ராசி வாசகர்களே!

ராசிநாதன் செவ்வாய் 6-ல் இருப்பது விசேஷமாகும். குரு பலமும் இருப்பதால் மனதுக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு வார முன் பகுதியில் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பயணத்தால் நலமுண்டாகும்.

கணவன்-மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். புதிய நிலபுலன்கள் சேரும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையும் நிகழும். 8-ல் சூரியன், சனி இருப்பது சிறப்பாகாது. கடுமையாக உழைக்க வேண்டிவரும். அரசாங்கம் மூலம் சில பிரச்சினைகள் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு

‎நிறங்கள்: பொன்நிறம், சிவப்பு, புகை நிறம், வெண்மை.

எண்கள்: 2, 3, 4, 9. ‎

பரிகாரம்: சனிப் பீரிதி செய்துகொள்வது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிப்பது சிறப்பாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அன்றாடப் பணிகளில் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள், உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். 5-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவை. அவர்களது நடத்தையில் கவனம் செலுத்திவருவது நல்லது. சுக்கிரன் 6-ம் இடத்திலும், சூரியன் சனி ஆகியோர் 7-ம் இடத்திலும் இருப்பதால் கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும்.

பக்குவமாகச் சமாளித்துவருவது நல்லது. கேளிக்கை உல்லாசங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். தீயவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. மாணவர்களது நிலை உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: வடக்கு, வடமேற்கு

‎நிறங்கள்: மெரூன், பச்சை

எண்கள்: 5, 7

பரிகாரம்: சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது நல்லது. துர்க்கையையும் மகாலட்சுமியையும் வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் பலமுடன் சஞ்சரிக்கிறார். இதனால் மன உற்சாகம் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவ்றறின் சேர்க்கை நிகழும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சிறப்பாக இருந்துவரும். நல்ல ஒரு தகவல் வந்துசேரும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள்.

4-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும். சிறு விபத்துகள் உண்டாக நேரலாம். சூரியன், சனி ஆகியோர் 6-ம் இடத்தில் இருப்பதால் அரசு உதவி கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு வந்துசேரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு, வடமேற்கு

‎நிறங்கள்: இளநீலம், வெண்மை

எண்கள்: 1, 6, 7, 8

பரிகாரம்: செவ்வாய்க்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாய், ராகு ஆகியோரும் 4-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் சஞ்சரிப்பது விசேஷமாகும். வார ஆரம்பத்தில் பொருள் வரவு அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விருந்து உபசாரங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதில் வெற்றியும் கிடைக்கும். பயணத்தின் மூலம் ஓர் எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையும் நிகழும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். 5-ல் சூரியனும் சனியும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் வாரமிது. பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு

‎நிறங்கள்: பொன்னிறம், சிவப்பு, வெண்மை

எண்கள்: 3, 4, 6, 9

பரிகாரம்: சனிப் பிரீதி செய்துகொள்ளவும்.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சுக்கிரன் உலவுவது சிறப்பானதாகும். இதர கிரகங்களும் சஞ்சாரம் விசேஷமாக இல்லை. சில இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. கோபத்தைக் குறைத்துக்கொள்வது அவசியம். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போது கவனத்துடன் இருந்தால் விபத்தைத் தவிர்க்கலாம்.

குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்பு தேவை. சினிமா, நாடகம், நாட்டியம் போன்ற கலைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். வார நடுப்பகுதியில் நல்லதொரு தகவல் வந்துசேரும். வாரக் கடைசியில் அலைச்சல் சற்று அதிகமாகும். நண்பர்கள், உறவினர்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசை: தென்கிழக்கு

‎நிறங்கள்: இளநீலம், வெண்மை | எண்கள்: 6

பரிகாரம்: செவ்வாய், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி புதன் 4-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவது விசேஷமாகும். சூரியன், சுக்கிரன், சனி ஆகியோரும் அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சுபகாரிய செலவுகளைச் செய்வீர்கள். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களுக்குச் சென்று வருவீர்கள். பேச்சில் இனிமை தவழும்.

முக வசீகரம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். புதிய துறைகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். பொது நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசை: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு

‎நிறங்கள்: நீலம், பச்சை, கருப்பு

எண்கள்: 5, 6, 8

பரிகாரம்: துர்க்கையையும் முருகனையும் வழிபடவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in