Last Updated : 14 May, 2021 11:59 AM

 

Published : 14 May 2021 11:59 AM
Last Updated : 14 May 2021 11:59 AM

அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா? 

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது என்கிறார் திருக்கோஷ்டியூர் ஸ்ரீராம் பட்டாச்சார்யர். .இன்று 14ம் தேதி அட்சய திருதியை நன்னாள்.

மேலும், ஸ்ரீராம் பட்டாச்சார்யர் அட்சய திருதியை நாளின் சிறப்புகள் குறித்துத் தெரிவிக்கிறார்.
அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

கங்கை, பூமியை முதன்முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் பாய்ந்தோடி வந்தது என்கிறது புராணம்.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

அட்சய திருதியை நாளில்தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள் என விளக்குகிறது புராணம்.

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்ர-புராணம்‘ விரிவாகவே தெரிவித்துள்ளது.

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி என்று லக்ஷ்மியின் அவதாரங்கள் நிகழ்ந்தன.

அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி, இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கினாள் என்று புராணம் தெரிவிக்கிறது. குறிப்பாக, அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார் என்கிறது விநாயக புராணம்.

வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

அதேபோல், அரியானா மற்றும் பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலில் இறங்கி உழவுத் தொழிலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயின் இனத்தவர்கள் அட்சய திருதியை புனித நாளாகப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.
****************

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x