பஞ்சமி... பங்குனி வியாழன்... வளம் தருவாள் வாராஹி

பஞ்சமி... பங்குனி வியாழன்... வளம் தருவாள் வாராஹி
Updated on
1 min read

பஞ்சமி திதியும் பங்குனி மாதத்து வியாழக்கிழமையும் இணைந்த நாளில், வாராஹி தேவியை மனதார வழிபடுவோம். வளமும் நலமும் தருவாள் தேவி. மங்கல காரியங்களின் தடைகளையெல்லாம் நீக்கி அருளுவாள் அன்னை. பஞ்சமி திதியில், மாலையில் விளக்கேற்றி ஸ்ரீவாராஹி தேவியின் மூல மந்திரங்களையும் காயத்ரியையும் பாராயணம் செய்து, நம் மனதில் உள்ள குறைகளையெல்லாம் சொல்லி வேண்டிக்கொண்டால், நம் வேண்டுதல்களையெல்லாம், கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வாள் தேவி.

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வத்துக்கு உகந்ததாகப் போற்றப்படுகிறது. ஒவ்வொரு வழிபாட்டுக்கும் உரியதாக வணங்கப்படுகிறது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. அதேபோல, துவாதசி திதியும் பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தசி திதி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கும் போற்றுவதற்கும் உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்து முருக வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவார்கள். அஷ்டமி திதியில் கால பைரவருக்கு ஆராதனைகள் செய்வது மிகவும் விசேஷமானது.

அதேபோல, திதிகளில் பஞ்சமி திதியானது, வாராஹி தேவியை வணங்குவதற்கு உரிய நன்னாள். சப்தமாதர்களில் ஒருத்தியாகத் திகழ்கிறாள் வாராஹிதேவி. சக்தியின் படைகளுக்கு தலைவியாகத் திகழ்ந்தவள் ஸ்ரீவாராஹி தேவி என்று போற்றுகிறது வாராஹி புராணம்.

பஞ்சமி திதியில், மாலையில் விளக்கேற்றி ஸ்ரீவாராஹி தேவியின் மூல மந்திரங்களையும் காயத்ரியையும் பாராயணம் செய்து, நம் மனதில் உள்ள குறைகளையெல்லாம் சொல்லி வேண்டிக்கொண்டால், நம் வேண்டுதல்களையெல்லாம், கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வாள் தேவி.
வாராஹி தேவிக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவது ரொம்பவே விசேஷம். வாராஹி தேவி வழிபாடு என்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. வாராஹி தேவி வழிபாட்டுக்குழுவினர், ஆராதனை அன்பர்கள் குழுவினர் என்றெல்லாம் குழுவாக இருந்து வாராஹி தேவிக்கு ஆராதனைகள் செய்து வேண்டிக்கொண்டால், நினைத்ததையெல்லாம் நடத்திக் கொடுப்பாள். எடுத்த காரியத்தையெல்லாம் ஜெயமாக்கிக் கொடுப்பாள் அன்னை.

18ம் தேதி வியாழக்கிழமை, பஞ்சமி நாளில், மாலையில் விளக்கேற்றுங்கள். மங்காத செல்வம் தரும் அன்னையை மனதார வேண்டுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in