வெற்றியை தருவான் வீர அனுமன்! 

வெற்றியை தருவான் வீர அனுமன்! 
Updated on
1 min read


எடுத்த காரியம் வெற்றிபெற எப்போதும் துணை நிற்பார் ஸ்ரீஅனுமன். வீர்யமும் தைரியமும் கொண்ட பராக்கிரமசாலியாகத் திகழ்கிறார் ஸ்ரீஅனுமன்.

தொழிலில் அடிக்கடி நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், எல்லாக் காரியங்களிலும் தேக்கமும் குழப்பமும் இருப்பதாக தவிப்பவர்கள், அனுமன் வழிபாடு செய்வது நலங்களைத் தரும்.

அனுமன், மிகுந்த வரப்பிரசாதி. வள்ளல் குணம் கொண்டவர். தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அனைத்து வரங்களையும் தந்தருளக்கூடியவர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பொதுவாகவே, பெருமாள் கோயில்களில், அனுமனுக்கு சந்நிதி அமைந்திருக்கும். அதேபோல், பல ஊர்களில் அனுமனுக்கு தனிக்கோயிலே அமைந்திருக்கிறது. பிள்ளையாரைப் போலவே தெருமுனைக் கோயில்களிலும் ஆஞ்சநேயர் கோயில்கொண்டிருக்கிறார். முருகப்பெருமான் போல், சில குன்றின் மீதும் மலையின் மீதும் கோயில் கொண்டிருக்கிறார் வாயுமைந்தன்.

வாழ்வில் தடைகளுக்கு மேல் தடை என்று கலங்கியிருப்பவர்கள், தம்பதி இடையே இணக்கமில்லாமல் சண்டை சச்சரவு என்றிருப்பவர்கள் தொடர்ந்து புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் மூல நட்சத்திர நாளிலும் ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வருவது அளவற்ற பலன்களைக் கொடுக்கும்.

அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு சார்த்தி வேண்டுவதும் விசேஷமானது. அதேபோல், வெற்றிலை மாலை சார்த்துவதும் அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.

துளசி மாலை சார்த்தியும் அனுமனை வேண்டிக்கொள்ளலாம்.

அனுமனின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தனை மேற்கொண்டால், காரியம் அனைத்தையும் ஜெயமாக்கித் தந்தருளுவார்.

க்யாதஸ் ஸ்ரீ ராம தூதஹ பவனதனுபவஹ பிங்களாக்ஷ சிகாவான்
சீதா சோகாப ஹாரி தசமுக விஜயீ லக்ஷ்மண ப்ராண தாத
ஆநேதா பேஷஜாத்ரே லவந ஜலநிதே லங்கனே தீக்ஷி தோயஹ
வீர ஸ்ரீமான் ஹனுமான் மம மனசீ வஸன் கார்ய சித்திம் தநோது

எனும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தும் ஸ்ரீராம ஜெயம் எழுதியும் அனுமனைப் பிரார்த்தனை செய்வோம். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பான் அஞ்சனை மைந்தன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in