

நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானையும் சந்நிதியில் இருந்தபடி காட்சி தரும் முருகக் கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு வரலாம். வீட்டில் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்தும் அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் முருகக் கடவுளுக்கு செவ்வரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டி வணங்குவதும் கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும். சொந்த வீடு கொடுத்து அருளுவார் கந்தகுமாரன்!
முருகப்பெருமானை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், சொந்த வீடு மனை வாங்கும் யோகம் அமைத்துக் கொடுப்பார் வெற்றிவேலன்.
எவ்வளவு சம்பாதித்தாலும் எல்லோருக்கும் இருக்கிற மிக முக்கியமான ஆசை, நியாயமான விருப்பம் சொந்தவீடு என்பதுதான். சொந்த வீடு என்பதுதான் பெரும்பான்மையோரின் லட்சியமாக இருக்கிறது.
‘வாழ்க்கைல நானும் கையை ஊன்றி கர்ணம் போட்டுக்கிட்டு வரேன். இன்னும் ஒரு வீடு அமையலையே’ என்று சொல்லாதவர்கள் குறைவுதான். ‘அட... சொந்தமா இடம் வாங்கிப் போட்டு ஏழுபத்து வருஷமாச்சு. ஆனா என்னவோ தெரியல... வீடு கட்டறது மட்டும் தள்ளிப் போயிகிட்டே இருக்கு’ என்று சொல்லி வருந்தாதவர்களே குறைவு. இப்படி கனவு இல்லம் என்பதுதான் எல்லோரின் ஏக்கமாகவும் வருத்தமாகவும் ஆதங்கமாகவும் பிரார்த்தனையாகவும் இருக்கிறது.
சொந்த வீடு அமைய வேண்டுமெனில், அவற்றுக்கெல்லாம் காரணகர்த்தாவாக திகழ்பவர்கள்... செவ்வாய் பகவானும் முருகப்பெருமானும்தான் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். சஷ்டி திதியில், கிருத்திகை நட்சத்திர நாளில், விசாக நட்சத்திர நாளில், செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய் பகவானையும் முருகக் கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால், சொந்த வீடு வாங்கும் கிடைத்தே தீரும் என்கின்றனர் பக்தர்கள்.
செவ்வாய் பகவான், பூமிகாரகன். நவக்கிரகங்களில் உள்ள முக்கியமான கிரகங்களில் செவ்வாய் பகவானும் ஒன்று. செவ்வாய் பகவானை செவ்வாய்க்கிழமையில் தரிசிப்பதும் வணங்குவதும் பலவிதமான நன்மைகளைத் தரும். அதேபோல் சீர்காழி மற்றும் சிதம்பரத்துக்கு அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் சந்நிதி அமைந்திருக்கிறது.
இங்கே சென்று அங்காரகனை வழிபட்டு வந்தாலும் செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைத்தருளும்.
அதேபோல், அருகில் உள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானையும் சந்நிதியில் இருந்தபடி காட்சி தரும் முருகக் கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு வரலாம். வீட்டில் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்தும் அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் முருகக் கடவுளுக்கு செவ்வரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டி வணங்குவதும் கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும். சொந்த வீடு கொடுத்து அருளுவார் கந்தகுமாரன்!