Last Updated : 12 Feb, 2021 09:21 AM

 

Published : 12 Feb 2021 09:21 AM
Last Updated : 12 Feb 2021 09:21 AM

தை கடைசி வெள்ளியில் ராகுகாலத்தில் தீபம்; மாங்கல்ய பலம்; மாங்கல்ய வரம் தருவாள் துர்கை!


தை கடைசி வெள்ளிக்கிழமையில் ராகுகாலத்தில் துர்கைக்கு தீபமேற்றி வழிபடுங்கள். எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். இன்னல்களையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி. இன்று 12ம் தேதி தை வெள்ளிக்கிழமை. தை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை. இந்த அற்புத நாளில், அகிலத்தின் சக்தியாகத் திகழும் துர்காதேவியை சரணடைவோம். செவ்வரளி சார்த்தி, எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம்.

வெள்ளிக்கிழமை என்றாலே விசேஷம்தான். வெள்ளிக்கிழமை என்றாலே அம்பாளைக் கொண்டாடும் நன்னாள்தான். செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உகந்த நாட்கள். இந்தநாளில், அம்பாளைத் தரிசிப்பதும் அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சூட்டுவதும் எண்ணிலடங்காத பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையில் அம்பிகையின் இன்னொரு சக்தியாகத் திகழ்கிற, இன்னொரு வடிவமாகத் திகழ்கிற துர்காதேவியை வணங்குவதும், துர்காதேவியின் சிலாரூபத்தைத் தரிசிப்பதும் நம் எண்ணங்களை இன்னும் மேம்படுத்தும். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளையெல்லாம் நீக்கி, அடுத்தக் கட்டத்துக்கு நம்மை உயர்த்திவிடும்.

துர்கை என்றாலே துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையும் கவலைகளையும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் போக்கி அருளக்கூடியவள் என்று பொருள். அனைத்து சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதி அமைந்திருக்கிறது. துர்கையை வழிபட வழிபட, மனக்கிலேசங்கள் நீங்கிவிடும். மனோபலம் பெருகிவிடும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமையில் மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். இந்த நேரத்தில் துர்கைக்கு தீபமேற்றுவது விசேஷம். எலுமிச்சை தீபமேற்றுவது இன்னும் சிறப்பானது. அதேபோல், வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த நேரத்தில், துர்கைக்கு அரளிமாலை சார்த்தி, எலுமிச்சை தீபமேற்றி வேண்டிக்கொண்டால், நினைத்த காரியத்தை ஈடேற்றித் தந்திடுவாள் அன்னை. இதுவரை இருந்த துக்கங்களையெல்லாம் பனி போல் விலகச் செய்து அருளுவாள் மகாசக்தி என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று 12ம் தேதி தை வெள்ளிக்கிழமை. தை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை. இந்த அற்புத நாளில், அகிலத்தின் சக்தியாகத் திகழும் துர்காதேவியை சரணடைவோம். செவ்வரளி சார்த்தி, எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம்.

வாழ்வில் மாங்கல்ய வரம் தந்திடுவாள். மாங்கல்ய பலம் கொடுத்திடுவாள். மங்காத செல்வத்தையும் புகழையும் அளித்திடுவாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x