

திருவோணமும் அமாவாசையும் இணைந்தநாளில், மகாவிஷ்ணுவை வழிபட்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும் என்கின்றனர் ஆச்சார்யர்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். வீட்டில் பெருமாள் படத்துக்கு துளசி மாலை கொண்டு அலங்கரித்து, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, துளசி தீர்த்தம் பருகினால், தீராத நோயெல்லாம் தீர்த்தருளுவார் வேங்கடவன். தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். கல்யாணம் முதலான மங்கல காரியங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்!
அமாவாசை நாள் என்பதே வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான நாள். அமாவாசை தினத்தில், முதலில் நம் முன்னோர்களை வணங்கவேண்டும். அவர்களுக்கு தர்ப்பணம் முதலான கடமைகளைச் செய்யவேண்டும். எள்ளும் தண்ணீரும் விட்டு அவர்கள் பெயர் சொல்லி, கோத்திரம் சொல்லி பிரார்த்தனை செய்யவேண்டும்.
அமாவாசையில் சிவ வழிபாடு செய்வதும் முன்னோரை நினைத்து படையலிட்டு, அந்த உணவை ‘மகாதேவ மகாதேவ மகாதேவ’ என்று சொல்லி காகத்துக்கு உணவிடவேண்டும். முன்னோர் வழிபாடு போல, சிவனாரைப் பிரார்த்தனை செய்வது போல, குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக அவசியம்.
குலதெய்வத்தை வணங்கவேண்டும். குலதெய்வத்தை சொந்த ஊரில், கிராமத்தில் இருக்கும் கோயிலுக்குச் சென்றுதான் வணங்கவேண்டும் என்றில்லை. அமாவாசை மாதிரியான நாளில், வீட்டில் இருந்தபடியே குலதெய்வத்தை அழைக்கலாம். குலதெய்வத்தை வழிபடலாம். முன்னோர் வழிபாடு செய்ததன் பலனும் குலதெய்வ வழிபாடு செய்ததன் பலனும் மும்மடங்காக நம்மை வந்தடையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், அமாவாசை வந்திருப்பது சிறப்புக்கு உரியது. மாலையில் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், பகவான் ரமணர், காஞ்சி மகா பெரியவா, பகவான் யோகி ராம்சுரத்குமார், அரவிந்தர், பாம்பன் சுவாமிகள், ஷீர்டி சாயிபாபா முதலான எண்ணற்ற மகான்களையும் குருமார்களையும் வழிபடுவது நம் வாழ்வில் இதுவரை இருந்த தடைகளையெல்லாம் நீக்கும். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும்.
அமாவாசை விசேஷம். தை அமாவாசை விசேஷம். குருவார தை அமாவாசை விசேஷம். அதிலும் திருவோண நட்சத்திரம் கூடிய அமாவாசை இன்னும் இன்னுமான விசேஷமானவை. இந்த நாளில், மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.
பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். வீட்டில் பெருமாள் படத்துக்கு துளசி மாலை கொண்டு அலங்கரித்து, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, துளசி தீர்த்தம் பருகினால், தீராத நோயெல்லாம் தீர்த்தருளுவார் வேங்கடவன். தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். கல்யாணம் முதலான மங்கல காரியங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்!