

துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 11-ல் குருவும் உலவுவது விசேடமாகும். அறிவாற்றல் கூடும். மனத்தில் தெளிவு பிறக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். செல்வ நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள்.
தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். 30-ம் தேதி முதல் மதிப்பு உயரும். உடல்நலம் சீராகும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். புதிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை நிகழும். பெண்களுக்கும் கலைத்துறையினருக்கும் செழிப்பான சூழ்நிலை வரும். 2-ல் சூரியனும், சனியும், 12-ல் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27 (பிற்பகல்), 29, 30, டிசம்பர் 2.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. திருமுருகனையும், துர்க்கை அம்மனையும் வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் சுக்கிரன், ராகு ஆகியோருடன் கூடி இருப்பது விசேடமாகும். வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் தேடிவரும். பயன்படுத்திக் கொள்வது நலல்து. கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். எதிர்ப்புகள் அடங்கும். பயணத்தால் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். இயந்திரப்பணிகள் லாபம் கொண்டுவரும். போக்குவரத்து இனங்களால் வருவாய் அதிகரிக்கும். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும்.
வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். வாரப்பின்பகுதியில் தெய்வ தரிசனம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். நல்ல தகவல் வந்து சேரும். மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறி வலுப்பெறுவதால் சுகம் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். 1-ம் தேதி முதல் புதன் 2-ம் இடத்திற்கு மாறுவதால் பண நடமாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். மாணவர்களது நிலை உயரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27 (முற்பகல்), 30, டிசம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வரவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்குராதிபதி குரு, 9-ல் பலம் பெற்றிருக்கிறார். செவ்வாய், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னணினிக்கு உயருவீர்கள். வழக்குகள், விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உதவிபுரிய முன்வருவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும்.
வெளிநாட்டுத் தொடர்புடைய வர்த்தகம் லாபம் தரும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறுவதும் விசேடமாகும். கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். மாதர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். முக்கியமான எண்ணங்கள், ஆசைகள் எல்லாம் நிறைவேறும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். 1-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் செய்து வரும். தொழிலில் வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29, டிசம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம். பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 9.
பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும், 11-ல் சூரியன், புதன், சனி ஆகியோரும் உலவுவதால் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். எதிர்ப்புகள் விலகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். தொழிலாளர்களது நிலை உயரும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடிவரும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும்.
புதிய பதவிகள் சிலருக்கு இப்போது கிடைக்கும். கூட்டுத்தொழிலில் அபிவிருத்தி காணலாம். கடல் வாணிபம் லாபம் தரும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. குரு 8-ல் இருப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பெரியவர்களின் மனம் புண்படாதவாறு நடந்து கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 30-ஆம் தேதி முதல் தொழிலில் வளர்ச்சி காணலாம். 1-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29, 30.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 7, 8.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சனி 10-ல் உலவுவதும் 7-ல் உள்ள குரு உங்கள் ராசியைப் பார்ப்பதும் விசேடமாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எண்ணங்கள் ஈடேறும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். மக்கள் நலம் சிறக்கும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள்.
புதிய பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். வியாபாரம் பெருகும். ஜலப்பொருட்களால் வருவாய் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். 30-ஆம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வதரிசனம் கிடைக்கும். 1-ம் தேதி முதல் புதன் லாப ஸ்தானம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் புத்திசாலித்தனம் பிரகாசிக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 8 .
பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது.
மீன ராசி வாசகர்களே
கோசாரப்படி கிரக நிலை சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். தேவைகளைச் சமாளிக்கச் சிலர் கடன்படவும் நேரலாம். பயணத்தால் சங்கடம் உண்டாகும். எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். 30-ஆம் தேதி முதல் மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை, ஆதாயம் உண்டு. எதிர்பாராத பொருள்வரவுக்கு இடமுண்டு. 1-ம் தேதி முதல் புதன் 10-ம் இடத்திற்கு மாறுவதால் கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு கமிஷன் ஏஜன்சி துறைகள் லாபம் தரும். தொழில் பங்குதாரர்களால் அனுகூலம் ஏற்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.
திசை: வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு.
எண்கள்: 2, 9.
பரிகாரம்:குருப்பிரீதி செய்து கொள்வது நலலது. சர்ப்ப சாந்தி செய்வதும் அவசியமாகும்.