

தை மாதத்தின் கடைசி சோமவாரம் இது. இந்த திங்கட்கிழமையில் ருத்ரம் சொல்லுவதும் ஜபிப்பதும் மகா புண்ணியம். சிவனாருக்கு வில்வம் சார்த்தி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி மனதார பிரார்த்தனை செய்துகொள்வது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை கடைசி சோமவாரத்தில் சிவ தரிசனம் செய்வோம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நமசிவாய மந்திரம் சொல்லி, சிவனாரைத் தொழுவோம். சிந்தனையில் தெளிவையும் ஞானத்தையும் தந்தருள்வார் ஈசன்.
திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்கு உரிய நன்னாள். சிரசில் சந்திரனை பிறையாகச் சூடிக்கொண்டிருக்கும் சிவபெருமானை, திங்கட்கிழமையில் வணங்குவது மிகுந்த விசேஷத்துக்கு உரியது என்பார்கள் ஆன்றோர்கள்.
சந்திரன் மனோகாரகன். நம் மனதை நல்லதாகவும் கெட்டதாகவும் ஆக்கும் வல்லமை கொண்டவன். மனதை எப்போதும் தெளிவாகவும் குழப்பமில்லாதபடியும் பயமின்றியும் வைத்திருப்பவன் என்றெல்லாம் சந்திர பகவானைச் சொல்லுவார்கள்.
ஆகவே, திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வதும் நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை வழிபடுவதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கவல்லது. தஞ்சாவூர் திருவையாறுக்கு அருகில் திங்களூர் திருக்கோயில் உள்ளது. நவக்கிரக தலங்களில் இதுவும் ஒன்று. நவக்கிரக ஸ்தலங்களில் சந்திர பகவானுக்கு உரிய கோயில் இது. இந்தத் தலத்துக்கு திங்கட்கிழமைகளில் சென்று வழிபடுவதும் பிரார்த்தனை செய்துகொள்வதும் மனக்குழப்பங்களையும் மனதில் ஏற்படும் பயத்தையும் போக்கவல்லது.
தை மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். உரிய பூஜைகளுக்கும் மந்திர ஜபங்களுக்கும் உரிய மாதம். தை மாதத்தில் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவபெருமானை வழிபடுவதும் நல்ல அதிர்வுகளையும் நல்ல எண்ணங்களையும் உண்டாக்கும்.
தை மாத சோமவாரத்தில், சிவலிங்கத் திருமேனியைத் தரிசிப்போம். தை மாதத்தின் கடைசி சோமவாரம் இது. இந்த திங்கட்கிழமையில் ருத்ரம் சொல்லுவதும் ஜபிப்பதும் மகா புண்ணியம். சிவனாருக்கு வில்வம் சார்த்தி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி மனதார பிரார்த்தனை செய்துகொள்வது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.