கடன் தொல்லை தீர்க்கும் ருணவிமோசனேஸ்வரர்! 

கடன் தொல்லை தீர்க்கும் ருணவிமோசனேஸ்வரர்! 
Updated on
1 min read

சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்வோம். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.

கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது கும்பகோணம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சாரபரமேஸ்வரர்.

’கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் பெருமான் கடன் போல் பெரிய பிரச்சினையும் துக்கமும் ஏதுமில்லை என்று எடுத்துரைத்துள்ளார். ‘எவ்வளவு சம்பாதிச்சும் கடன் தொல்லை கழுத்தை நெரிக்குதே’ என்று புலம்புகிறவர்களும் வருந்துகிறவர்களும் அவசியம் இந்தத் தலத்துக்கு வந்து சாரபரமேஸ்வரரை தரிசித்து வேண்டிக்கொண்டால், விரைவில் கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சாரபரமேஸ்வரருக்கு உடையவர் என்றும் செந்நெறியப்பர் என்றும் திருநாமங்கள் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை. சாரபரமேஸ்வரரை தரிசித்தாலும் மூலவராக இவர் திகழ்ந்தாலும் தலத்தின் நாயகனாகப் போற்றப்படுகிறார் ருணவிமோசன லிங்கேஸ்வரர். இவருக்கு இங்கே தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற தலம் இது. காவிரியின் தென்கரையில் 127வது தலம் இது என்று போற்றப்படுகிறது. கடன் நிவர்த்தி ஸ்தலம் என்று போற்றப்படுகிற திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, ருணவிமோசனேஸ்வரரை மனதார தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்வோம். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in