

தை வெள்ளிக்கிழமையில் மறக்காமல் லக்ஷ்மி அஷ்டோத்திரம் கேளுங்கள். சொல்லுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். முடிந்தால், சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வழங்குங்கள். சுக்கிர யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிர பலம் பெற்று சுபிட்சத்துடன் திகழலாம்.
வெள்ளிக்கிழமை என்பதை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் பலம் பொருந்திய நன்னாள். வெள்ளிக்கிழமை என்பது லக்ஷ்மிக்கு உரிய நாள். அம்பாளுக்கு உரிய நாள். சக்தி தெய்வங்களுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில், அம்பாள் வழிபாடு செய்வது விசேஷம் என்று போற்றுகிறது சாஸ்திரம்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய நாள். இந்தநாட்களில், காலையும் மாலையும் விளக்கேற்றி, அம்பிகையை ஆராதனை செய்வது வியக்கத்தகு மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை விசேஷம். அதிலும் தை வெள்ளிக்கிழமை இன்னும் ரொம்பவே விசேஷம். காலையும் மாலையும் விளக்கேற்றி லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, மகாலக்ஷ்மியின் திருவுருப்படத்துக்கு அல்லது சிலை திருமேனிக்கு குங்குமத்தால் அர்ச்சித்து செய்வது மாங்கல்ய பலத்தைக் கொடுக்கும். அதேபோல், திருமணம் தள்ளிப்போகிறதே என கலங்கித் தவிப்பவர்கள், வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில் கிழக்குமுகமாக அமர்ந்து லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி வந்தால், விரைவிலேயே திருமணப் பாக்கியம் கைக்கூடும். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுத்துத் தந்தருள்வாள் மகாலக்ஷ்மி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
தை வெள்ளிக்கிழமையில் மறக்காமல் லக்ஷ்மி அஷ்டோத்திரம் கேளுங்கள். சொல்லுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். முடிந்தால், சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வழங்குங்கள்.
சுக்கிர யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிர பலம் பெற்று சுபிட்சத்துடன் திகழலாம்.