Last Updated : 28 Jan, 2021 02:29 PM

 

Published : 28 Jan 2021 02:29 PM
Last Updated : 28 Jan 2021 02:29 PM

தைப்பூசம் ஸ்பெஷல் ; கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள்

தைப்பூச நன்னாளில்... சஷ்டி கவசம் பாராயணம் செய்தால், நம் சங்கடங்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சகல தோஷங்களும் நீங்கப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். மிகச்சிறந்த முருகனடியார். அவர் எங்கு, யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனாலும் கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து நயமாகச் சொல்லப்பட்டு உள்ளது. எனவே, பாலதேவராய சுவாமிகள் வடமொழியில் சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்தவராக இருக்கலாம் என்பவர்களும் உண்டு.

மேலும், சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணித்துள்ளார்கள்.

பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்த சஷ்டி கவசம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்... என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட சஷ்டி கவசம்தான்.

தைப்பூச நன்னாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று கந்தபெருமானை தரிசியுங்கள். வீட்டில், முருகப்பெருமானை காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து மனதார வழிபடுங்கள். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடத்தித் தந்தருளுவார் முருகப்பெருமான். காரியத் தடைகள் அகலும். எடுத்த காரியத்தில் வெற்றி மேல் வெற்றி தந்தருளுவார் வெற்றி வடிவேலன்.

தைப்பூச நன்னாளில்... சஷ்டி கவசம் பாராயணம் செய்தால், நம் சங்கடங்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சகல தோஷங்களும் நீங்கப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x