Last Updated : 26 Jan, 2021 12:26 PM

 

Published : 26 Jan 2021 12:26 PM
Last Updated : 26 Jan 2021 12:26 PM

திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்தநாள்; தென்னாடுடைய சிவனே போற்றி

திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம். இன்று 26ம் தேதி செவ்வாய்க்கிழமை, பிரதோஷம். அற்புதமான இந்த நன்னாளில், மாலையில் சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெறும். நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் விமரிசையாக நடந்தேறும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவது விசேஷம். பல சங்கடங்களையும் கஷ்டங்களையும் தீர்த்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி உண்டு. அந்தத் திதியும் ஒவ்வொரு தெய்வத்துக்கு உரிய திதியாகப் போற்றப்படுகிறது. ஏகாதசி திதியும் துவாதசி திதியும் பெருமாளுக்கு உகந்த நாளாக போற்றப்படுகிறது.

சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்கு உரிய நாளாக வணங்கப்பட்டு வருகிறது. பஞ்சமி திதியின் போது வாராஹி தேவியை வணங்குவோம். சஷ்டி திதி என்பது முருகக் கடவுளுக்கு உகந்த நன்னாள். இந்தநாளில் விரதம் மேற்கொண்டு, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவார்கள் முருக பக்தர்கள்.

அஷ்டமியில் பைரவ வழிபாடு விசேஷமானது. காலபைரவருக்கு வடை மாலை முதலானவை சமர்ப்பித்து வணங்கினால், கஷ்டங்களும் நஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இதேபோல், நட்சத்திரங்களில் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாக திருவாதிரை நட்சத்திரம் போற்றப்படுகிறது. அதனால்தான், மார்கழி திருவாதிரை, மிகுந்த விசேஷத்துக்கு உரிய நாளாக, ஆருத்ரா தரிசனமாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. அதேபோல் சிவபெருமானுக்கு உரிய திதி திரயோதசி. ஈசனுக்கு உரிய இந்த இரண்டு விஷயங்களும் இணைந்து வருவது இன்னும் விசேஷமானதாக, அரிதானதாக, சிறப்புக்கு உரியதாகப் போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திரயோதசி என்பதுதான் பிரதோஷமாக, பிரதோஷ பூஜையாக அனுஷ்டிக்கப்படுகிறது. திருவாதிரை நட்சத்திர நாளும் திரயோதசி திதியும் இணைந்த நாள் இன்று (26ம் தேதி).

அற்புதமான இந்த நன்னாளில், மாலையில் சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெறும். நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் விமரிசையாக நடந்தேறும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவது விசேஷம். பல சங்கடங்களையும் கஷ்டங்களையும் தீர்த்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், சிவலிங்கத் திருமேனிக்கு குளிரக்குளிர அபிஷேகங்கள் நடைபெறும். ஆராதனைகள் நடைபெறும். பிரதோஷ புண்ணிய தினத்தில், சிவனாருக்கு வில்வம் சார்த்துவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.

திருவாதிரையும் திரயோதசியும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை தரிசிப்போம். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களைத் தந்தருளுவார் சிவனார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x