Last Updated : 24 Jan, 2021 06:08 PM

 

Published : 24 Jan 2021 06:08 PM
Last Updated : 24 Jan 2021 06:08 PM

பணப் பிரச்சினை தீரும்; வியாபாரத்தில் லாபம்; உத்தியோகத்தில் உயர்வு; 25ம் தேதி வாஸ்து நாள்; வாஸ்து பகவானை வணங்குவோம்!

வாஸ்து நாளில், வாஸ்து நேரத்தில், இல்லத்தில், பூஜையறையில் விளக்கேற்றி, தீப தூப ஆராதனைகள் செய்து வழிபட்டால், சகல நன்மைகளும் தந்தருளுவார். இதுவரை இருந்த வியாபாரம் முதலான தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியையும் தம்பதி இடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தித் தருவார். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார் வாஸ்து பகவான்!

வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருக்கும் மாதங்களைக் குறிப்பிடுகிறது மனையடி சாஸ்திரம். வருடத்தில் நான்கு மாதங்கள் வாஸ்து பகவான் உறக்கத்திலேயே இருப்பார். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத்தில் இருப்பார் என்றும் அவர் விழித்திருக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய எட்டு மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் விழித்திருப்பார் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பின் மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே, உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது


வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானியப் பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

சிவபெருமான் வாஸ்து புருஷனிடம் பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட்டார். வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியைச் செய்து முடித்தார்.

அடுத்து... வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று அருளினார் சிவனார். வாஸ்து விழிக்கும் நேரம் வாஸ்து பகவானை வழிபட்டு வந்தால், மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை முதலான இடங்களில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சகலவிதமான நன்மைகளும் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள், தீயசக்திகள், துர்தேவதைகள் அகன்று ஐஸ்வர்ய கடாக்ஷம் கிடைக்கப் பெறலாம் என்கிறது வாஸ்து புராணம்.

ஒவ்வொரு தேவதையும் தனித்தன்மை மிக்கவர்கள். . மனித வாழ்க்கையின் செயல்பாடுகளை இவை கட்டுப்படுத்தி வையகத்தின் ஆளும் நியதிகளை நிர்வகிக்கின்றன என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கு திசையின் அதிபதியாகவும் தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராகவும் போற்றப்படுகின்றனர். பிறந்த உயிருக்கு மரணத்தைக் கொடுக்கும் செயல்களைச் செய்யும் எமதருமன் தென் திசைக்கு அதிபதி. விதிக்கு ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், உலக நியதிகளுக்கு பக்கபலமாக இருப்பவருமாக வருண பகவான் கொண்டாடப்படுகிறார். இவர் மேற்கு திசையின் அதிபதி.

செல்வத்தையும் ஐஸ்வர்யத்தையும் தருகிற குபேரன், வடக்கு திசைக்கு அதிபதியாகத் திகழ்கிறார். இருகோடுகளின் சந்திப்பாகிய மூலை வாஸ்துவின் அதிக சக்திக்கு உரியது என்கிறார்கள்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மகா பூதங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவை ஒன்றோடு ஒன்று சேர்க்கப்படும்போது வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. ஒரு வீடு என்பதற்குள், பஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகும்; நல்ல அதிர்வுகள் சூழ்ந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒரு வீட்டின் நிலை வாசல், ஜன்னல், சமையலறை, பூஜையறை உட்பட சகல இடங்களும் வாஸ்து அமைப்பின்படி நிறுவப்பட வேண்டும். கட்டப்பட வேண்டும். வாஸ்துப்படி அமைந்திருந்தால், அங்கே அவரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அதேபோல் வாடகை வீடோ சொந்த வீடோ, எதுவாக இருந்தாலும் வாஸ்து நாளில், வாஸ்து புருஷனை மகிழ்விக்க வேண்டும். மகிழ்விக்கும் விதமாக, வாஸ்து பகவானை வணங்கவேண்டும்.

வாஸ்து நாளில், வாஸ்து நேரத்தில், இல்லத்தில், பூஜையறையில் விளக்கேற்றி, தீப தூப ஆராதனைகள் செய்து வழிபட்டால், சகல நன்மைகளும் தந்தருளுவார். இதுவரை இருந்த வியாபாரம் முதலான தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியையும் தம்பதி இடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தித் தருவார். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார் வாஸ்து பகவான்!

நாளை 25ம் தேதி திங்கட்கிழமை வாஸ்து நாள். வாஸ்து பகவானுக்கு உரிய நாள். வாஸ்து தெய்வத்தை மனதார வழிபடுவதற்கு உரிய நாள். காலை 10.41 மணியில் இருந்து 11.17 மணி வரை வாஸ்து நேரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x