

வியாசர், சமர்த்த ராமதாசர், வீர சிவாஜி முதலானோர் அனுமன் வழிபாட்டைக் கொண்டு பல வரங்களைப் பெற்றனர். அனுமனின் முழுமையான பேரருளைப் பெற்றனர். அனுமன் ஜயந்தி நன்னாளில், அனுமனை மனதார வேண்டுவோம். காரியத்தை வீரியமாக்கி, செயலில் வெற்றியைத் தந்திடுவார் அனுமன்!
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் இரண்டு நதிகளுக்கு இடையில் அதாவது... தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது. இதனுடைய சரித்திரப் பெயர் பரிக்கல். கிராமத்தின் நடுவில் இந்தக் கோயில் அமைந்து உள்ளது. . விமானத்தின் மேற்கூரை அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது.
பக்தர்கள் நுழைவாயிலில் ஆஞ்சநேயரையும், விநாய கரையும், நாகர்களையும் பிரகாரத்திலும் சேவிக்கலாம். கருடனை சேவித்த பிறகு மூலவர் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தி. ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலைகளை தென் இந்தியாவில் நிறுவினார். அவற்றில் இங்கு உள்ள ஆஞ்சநேயரும் உண்டு.
இதேபோல், சத்ரபதி வீரசிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர். ஆஞ்சநேய பக்தரான இவர், தன் அதீதபக்தியால் ராமனின் பிறப்போடு அனுமனின் பிறப்பையும் இணைத்து விட்டார். தசரத சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் நடத்திய போது, கிடைத்த தெய்வீகப் பாயசத்தை தன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகிய மூவருக்கும் வழங்கினார்.
அதைக் குடித்த அவர்கள் ஸ்ரீராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகிய குழந்தைகளைப் பெற்றனர். லட்சுமண, சத்ருக்னரின் தாயான சுமித்ரா அருந்திய பாயசத்தில் ஒருபங்கை வாயு தேவன் எடுத்துச் சென்று அஞ்சனாதேவிக்கு வழங்கினார். அதைப் பருகியதால் ராமனுக்கு ஈடான அனுமனைப் பெற்று மகிழ்ந்தாள் என்று குரு சமர்த்த ராமதாசர் அருளியுள்ளார்.
வியாசரும் சத்ரபதி சிவாஜியும் சமர்த்த ராமதாஸரும் அனுமன் வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு பல வரங்களைப் பெற்றனர். அனுமன் ஜயந்தி நன்னாளில், அனுமனைத் தொழுவோம். காரியத்தை ஜெயமாக்கித் தந்திடுவார் ஆஞ்சநேயர்.