Last Updated : 04 Jan, 2021 05:08 PM

 

Published : 04 Jan 2021 05:08 PM
Last Updated : 04 Jan 2021 05:08 PM

வீட்டு வாசலில் விளக்கேற்றி எலுமிச்சை வைத்தால் கண் திருஷ்டி விலகும்;  குடும்பப் பிரச்சினை அகலும்! 

வீட்டு வாசலில் மஞ்சள் கலந்த எலுமிச்சையை இரண்டுபக்கமும் வைத்து, அகல் விளக்கு ஏற்றி வைத்து மார்கழிச் செவ்வாய்க்கிழமையில் வழிபடுங்கள். இல்லத்துத் திருஷ்டியெல்லாம் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.

விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விளக்கேற்றுவது என்பது முதலில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.

பொதுவாகவே தினமும் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குறிப்பாக, செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கேற்றி நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும். அதேபோல், எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் விளக்கேற்ற வேண்டும். ஏதேனும் ஒரு உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளவேண்டும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், வீட்டு நிலைவாசலில் எலுமிச்சையை சரிபாதியாக்கி அதில் மஞ்சள் தோய்த்து வைக்க வேண்டும். அதேபோல், வாசலின் இரண்டு பக்கமும் அகல் விளக்குகள் மாலை வேளையில் ஏற்றி வைக்க வேண்டும்.

வாசலில், எலுமிச்சையையும் அகல் விளக்கையும் வைத்துவிட்டு, பூஜையறையில் வழக்கம் போல் விளக்கேற்ற வேண்டும். அம்பாள் ஸ்துதி சொல்லி பாராயணம் செய்யலாம்.

அதேபோல், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலானவற்றை பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.
செவ்வாய்க்கிழமை என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யும் நாள். மேலும் முருகக் கடவுளுக்கு உகந்த நாள். அம்பாள் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.

மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழியை தனுர் மாதம் என்பார்கள். மார்கழி மாதத்தில் தவம் மேற்கொள்ளலாம். ஸ்லோகங்கள் கற்றுக்கொண்டு பூஜை செய்யலாம். கலைகளையும் கல்வியையும் புதிதாக பயிலலாம். மார்கழி மாதத்தில் நாம் செய்கிற வழிபாடுகளும் பூஜைகளு மும்மடங்கு பலன்களைத் தந்தருளக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், வீட்டில் வெள்ளி விளக்கு இருந்தால், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெள்ளி விளக்கு ஏற்றி வழிபடுங்கள். அம்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த செந்நிற மலர்ககளைச் சூட்டி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

வாசலில் வைத்திருக்கும் எலுமிச்சையும் விளக்கும் உங்கள் வீட்டுத் திருஷ்யைப் போக்கி அருளும். அம்மனின் சக்தி இல்லத்துக்குள் வியாபித்து காக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x