ஜகாத் என்னும் தர்மம்

ஜகாத் என்னும் தர்மம்
Updated on
1 min read

இஸ்லாமியச் சட்டப்படி ஒவ்வொரு மனிதனும் தன் சொத்தில் ஒரு பகுதியை ஏழையான அண்டை அயலாருக்குக் கொடுக்கும் கடமை பெற்றுள்ளார். ஒருவருடைய உடைமை, வியாபாரத்தில் லாபம், வருவாய் ஆகியவற்றில் இரண்டரை சதவீதம் ஜகாத்துக்காக ஒதுக்குதல் வேண்டும். வேளாண்மை மற்றும் சுமை தூக்க உதவும் கால்நடைப் பிராணிகளுக்கு ஜகாத்திலிருந்து விதிவிலக்கு உண்டு.

இத்துடன் ரமலான் மாதத்தின் இறுதியிலும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் அன்றும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும், அவனது குடும்பத்தில் உள்ளவர் சார்பிலும் வீட்டில் உள்ள விருந்தினர் சார்பிலும் ஜகாத் கொடுக்க வேண்டும். கோதுமை, பேரீச்சை, திராட்சை, அரிசி மற்றும் பிற தானியங்கள் ஆகியவற்றைத் தரலாம்.

ஜகாத் பெறுவதற்கு உரிமையுள்ளோர்

# ஏழைகள், தேவையுள்ளவர்கள்

# ஜகாத் வசூலித்து விநியோகிப்பவர்

# விடுதலையடைய விரும்பும் பொருள் வசதியற்ற அடிமைகள்

# வாங்கிய கடனைக் கொடுக்க சக்தியற்ற கடன்பட்டோர்

# பிரயாணிகளும் புதியவர்களும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in